பொது செய்தி

தமிழ்நாடு

புறநிழல் நிலவு மறைப்பு

Added : ஜன 12, 2020
Advertisement
 புறநிழல் நிலவு மறைப்பு

சென்னை: இந்த ஆண்டின், முதல் வான்வெளி நிகழ்வான, புறநிழல் நிலவு மறைப்பு என்ற சந்திர கிரகணம் நிகழ்ந்தது. ஆனால், இதனை ஒரு நிகழ்வாக, விஞ்ஞானிகள் எடுத்துக் கொள்ளவில்லை.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே, நிலவு வரும்போது, சூரிய கிரகணம் நிகழ்கிறது. நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே, பூமி இருக்கும்போது, அது, சந்திர கிரகணம்.சந்திர கிரகணத்தின் போது, சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய, மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். சூரிய கதிர்கள், பூமி மீது விழுந்து, பூமியின் அரை நிழற்பகுதியில் நிலவு வரும். இதனை, பெனும்பிரல் என்ற, புறநிழல் நிலவு மறைப்பு, சந்திர கிரணம் என்கின்றனர்.சூரிய ஒளியில், சந்திரன் மயங்கிய நிலையில் காணப்படுவதால், அதை, ஓநாய் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் இரவு, 10:37 மணி முதல், நேற்று அதிகாலை, 2:42 மணி வரை, சந்திர கிரகணம் நடந்தது. நள்ளிரவு, 12:41 மணிக்கு உச்சத்தை பெற்றது. ஆனால், இந்த சந்திர கிரகணத்தில், எந்த மாற்றமும் ஏற்படாததால், அதை ஒரு நிகழ்வாகவே, இந்திய விஞ்ஞானிகள் எடுத்துக் கொள்வதில்லை.

பஞ்சாங்கங்களில், இந்த கிரகணம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. கோவில்களிலும், சந்திர கிரகணத்திற்கான பரிகாரம் ஏதும் செய்யப்படவில்லை.இந்தாண்டு, இரண்டு சூரிய கிரகணமும், நான்கு சந்திர கிரகணங்களும் நிகழ உள்ளதாக, 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X