அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எந்த கசப்பும் இல்லை' அழகிரி, 'அந்தர் பல்டி!'

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (13)
Advertisement
 'எந்த கசப்பும் இல்லை' அழகிரி, 'அந்தர் பல்டி!'

சென்னை: ''தி.மு.க.,வுடன் உறவு நன்றாகவே உள்ளது; எங்களுக்குள் எந்த கசப்பும் இல்லை,'' என, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

'ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வின் செயல்பாடு, கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. 'மாவட்ட ஊராட்சிகளில், ஒரு தலைவர் பதவியையோ, துணை தலைவர் பதவியையோ, தி.மு.க., வழங்கவில்லை' என, நேற்று முன்தினம், அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.அவரது அறிக்கை, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேற்று அவர் அளித்த பேட்டி:அந்த அறிக்கை, முடிந்து போன விஷயம். அதில், புதிதாக எதுவும் இல்லை. தி.மு.க., கூட்டணியுடன் உறவு நன்றாகவே உள்ளது; எங்களுக்குள் எந்த கசப்பும் இல்லை. ஒரு கருத்து கூற வேண்டியிருந்தது; அதை தெரிவித்தோம். நட்பு தொடர்கிறது; எந்த பிரச்னையும் இல்லை.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகவில்லை. அரசியல் மேல் மட்டத்தில் பேச வேண்டியதை, உங்களிடம் பேச முடியாது. ஜனநாயகத்தில், யாரும் யாரையும் மிரட்ட முடியாது. நாங்கள் நல்ல நண்பர்கள். இந்த கூட்டணி, ஓரிரு இடங்களுக்கான கூட்டணி அல்ல; கொள்கை ரீதியான கூட்டணி. இவ்வாறு, அழகிரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜன-202018:26:56 IST Report Abuse
Bhaskaran ஐயா ரெண்டு நாளைக்கு முன்னே சென்னைக்கு வந்திருக்கும் சர்க்கஸில்அரை பஜார் போட்டு புது புது பல்டி கத்துக்கொண்டு வந்திருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
12-ஜன-202016:32:05 IST Report Abuse
Baskar இனி இவர் பெயர் அந்தர் பல்டி அழகிரி என்றே கூப்பிடுவோம். காங்கிரஸின் எல்லாம் இப்படி தான். தலைவர் ........... யாரு தளபதியாயிற்றே.
Rate this:
Share this comment
Cancel
Rocky - Doha,கத்தார்
12-ஜன-202013:02:12 IST Report Abuse
Rocky கசப்பெல்லாம் இல்லை கொஞ்சம் காரம், உப்பு, புளிப்பு, துவர்ப்புதான் சாஸ்தி..இல்ல சார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X