பொது செய்தி

இந்தியா

தினமலர் ஷாப்பிங் திருவிழா 'இன்றும், நாளையும்' மட்டுமே!

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020
Advertisement
 தினமலர் ஷாப்பிங் திருவிழா 'இன்றும், நாளையும்' மட்டுமே!

வாய்ப்பை நழுவ விடாதீர்... ஓராண்டு காத்திருக்கனும்
புதுச்சேரி:புதுமை பொருட்களின் சங்கமம், பொழுது போக்கு, குட்டீஸ்களை குழிபடுத்தும் விளையாட்டுகள், நாவிற்கு சுவையூட்டும் வகை வகையான உணவுகள் என, பல்வேறு அம்சங்கள் தினமலர் ஷாப்பிங் திருவிழாவில் நிறைந்துள்ளதால், குடும்பத்துடன் வந்து மன நிறைவோடு ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி- கடலுார் சாலையில், கோர்ட் எதிரில் ஏ.எப்.டி., மைதானத்தில், 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 9ம் தேதி துவங்கியது. முழுவதும் 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட மூன்று அரங்குளில், வெளி மாநில ஸ்டால்கள் உள்ளிட்ட ஏராளமான ஸ்டால்களில், வேறெங்கும் காணக்கிடைக்காத புதுமையான பொருட்கள் இந்த ஆண்டு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால், மூன்றாம் நாளான நேற்றும் மக்களின் ஆர்வம் குறையவில்லை. புதுச்சேரி மட்டுமல்லாது கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து, குளு குளு அரங்கில் ஷாப்பிங் செய்து மகிழ்ந்தனர்.
ஆடைகளின் அணிவகுப்பு
பெண்களின் அழகுக்கு மேலும் அழகூட்டும் வகையில் அழகு சாதன பொருட்கள், புது வகை ஆடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பொது அறிவு 'சிடி' க்கள், ஆண்களுக்கான ஆடைகள், பெல்ட், பர்ஸ் உள்ளிட்ட அணிகலன்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு, மலிவான விலையில் கிடைப்பதால், மக்கள் விரும்பி வாங்கி சென்றனர்.
பைக் பிரியரா நீங்கள்..
மொபட் மற்றும் கார் பிரியர்களுக்காக ஆட்டோ மொபைல் அருகில் பிரபல கார் மற்றும் பைக் கம்பெனிகளின் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. பைக் மற்றும் கார்களை வாங்க விரும்புவோர், விலை விபரம் மற்றும் வாகனங்களில் அமர்ந்து பார்த்து, தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று வருகின்றனர். பலர் புக்கிங் செய்தும் வருகின்றனர். குறிப்பாக சக்ராலயா மோட்டார்சின் கார்கள், விக்னேஷ் நிசான் நிறுவன கார்கள் விக்னேஷ் மோட்டார்சின் வெஸ்பா வாகனங்கள், வள்ளி மோட்டார்ஸ், டி.வி.எஸ்., நிறுவன மோட்டார் பைக்குகளின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.
பர்னிச்சர் உலகம்
எமர்ஜென்சி விளக்குகள், வீட்டை அலங்கரிக்கும் பல வண்ண விளக்குகள், குறைந்த மின்சாரத்தில் சுடுநீர் கருவி, வீட்டுக்கான மர புளோரிங், சோபா அலங்கார கட்டில், பர்னிச்சர்கள் ஆகியவற்றின் அணிவகுப்பு, பார்ப்போரை மெய்மறக்க செய்கிறது. வகை வகையான நாற்காலிகள், குஷன் மெத்தைகளும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.
சொந்த வீடு ஆசையா...
சொந்த வீடு கனவை நிறைவேற்றும் வகையில், 'கனவு இல்லம்' அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பற்றி விபரங்கள், கண்கவர் தரை மற்றும் பாத்ரூம் டைல்ஸ் வகைகள், வீட்டின் உட்புறத்திற்கு மேலும் மெருகூட்டும் திரைச்சீலைகள், தரை விரிப்புகள் உள்ளிட்ட இன்டீரியர் டெக்கரேஷன் பொருட்கள், சமையலறைக்கு அழகூட்டும் சிம்னிகள், டிஷ் வாஷ் உள்ளிட்ட சாதனங்கள், அலங்கார விளக்குகள் என வீட்டுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் குவிந்துள்ளன.
திக்குமுக்காடினர்
கண்காட்சியில் கரண்டி முதல் கார் வரையில், கிடைக்காத பொருட்களே இல்லை என்ற நிலையில், பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற தரமான பொருட்கள் மலிவான விலையில் குவிக்கப்பட்டுள்ளது. எதை வாங்குவது, எதை விடுவது என, கண்காட்சிக்கு வந்தவர்கள் திக்குமுக்காடினர்.
அதிர்ச்சி தரும் தள்ளுபடி..
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பல்வேறு ஸ்டால்களில் அதிர்ச்சி தரும் வகையில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. படுக்கை விரிப்புகள், சமையல் சாதனங்கள், பெண்களுக்கான பேஷியல் கிட், காலணிகள், அழகுசாதன பொருட்கள், பர்னிச்சர்கள், கிச்சன் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என, பல்வேறு பொருட்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுவதால், எக்ஸ்போவுக்கு வருபவர்கள், பொருட்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
'குட்டீஸ்கள் குஷி...'
பெற்றோர்களுடன் வரும் குட்டீஸ்களை மகிழ்விக்க ஒட்டக சவாரி, கிரிக்கெட் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. கார் மற்றும் பைக் ரைடு, பெண்டுலம் விளையாட்டு, ஜம்பிங் பலுான், ரயில் பயணம், கார் ரேஸ், வாட்டர் போட் உள்ளிட்ட விளையாட்டுகளை குழந்தைகள் ஒரு கை பார்த்துவிட்டு குதுாகலத்துடன் செல்கின்றனர்.
ருசிக்கலாம் வாங்க...
பெற்றோருக்கு ஷாப்பிங் செய்த களைப்பு, குழந்தைகளுக்கு விளையாடிய களைப்பு தீர்க்க நாங்க ரெடி என, உணவு அரங்கம் அவர்களை வரவேற்கிறது. அங்கு, சைவம் மற்றும் அசைவ உணவுகளை வகை வகையாக ருசிக்கலாம். சுவையால் சுண்டி இழுக்கும் திண்டுக்கல் வேணு பிரியாணி, பீசா, பர்கர், சாண்ட்விச், ஆந்திரா, கேரளா மற்றும் சைனீஸ் உணவு வகைகள், ஐஸ் கோலா, பான் பான் ஐஸ் கிரீம், குல்பி உள்ளிட்ட பல வகையான ஐஸ் கிரீம்கள், போலி, பனியாரம், மதுரை பன் பரோட்டா என, பல வகை உணவு வகைள் உடனுக்குடன் தயார் செய்து தருகின்றனர்.


புட் கோர்ட்:
ஜில்..ஜில்.. ஜிகர்தண்டா
மதுரையில் மல்லிக்கு அடுத்தபடியாக பிரபலமானது ஜிகர்தண்டா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் மதுரையில் கிடைக்கும் ஜிகர்தாண்டாவின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதனைசாப்பிடவே பலரும் மதுரைக்கு போவார்கள். தினமலர் கண்காட்சியிலும் புட் கோர்ட்டில் மதுரையின் ஒரிஜினல் ஜிகர்தண்டா ஸ்டால் அமைந்துள்ளது. ஒரு கிளாஸ் ஜில்..ஜில் ஜிகர்தாண்டா உள்ளே போனதும், அதன்சுவை உங்களைமயக்கி கிறங்கடித்து விடும். அதன் தனித்துவமான சுவையைவாழ்வில் என்றைக்கும் மறக்க மாட்டீர்கள்.புத்துணர்ச்சி வெரைட்டி ஜூஸ்ஷாப்பிங் செய்துவிட்டு புட்கோர்ட்டிற்கு வருபவர்களுக்குபுத்துணர்ச்சியுடன் வரவேற்கிறது ராசா வெரைட்டி ஜூஸ் ஸ்டால். ஆப்பிள், அண்ணாசி, மாதுளை என 50க்கும் மேற்பட்ட வெரைட்டி ஜூஸ்கள் கிடைக்கின்றன. இன்றைய டைட் ெஷட்யூல் வாழ்க்கை முறைக்கும் உடலுக்கும் உள்ளத்திற்கு எனர்ஜி தரக்கூடிய வெரைட்டி ஜூஸ்களை விரும்பிய ஆர்டர் செய்து புத்துணர்வு பெறலாம்.அலங்கரிக்கும் ஸ்டால்கள்
புதுச்சேரியில் கடலுார் சாலை கோர்ட் எதிரில் உள்ள ஏ.எப்.டி., மைதானத்தில் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர் எக்ஸ்போ நடந்து வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட வெளிநாடு, வெளி மாநில ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் ரூ. 40. தினமும் காலை10:00 மணி முதல் இரவு 8:00 வரையில் கண்காட்சியில் ஷாப்பிங் செய்யலாம். வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த இட வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு உதவ, லட்சுமிநாராயணா மருத்துவக்கல்லுாரி மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளது.
புதுமையான பொருட்கள்

'சீலிங் கிளாத் டிரையர்'உயரமான அடுக்குமாடி கட்டடங்களில் வசிப்பவர்களுக்கு துணி உலர வைப்பது பெரிய கவலை.
துணி உலர வைக்க இடம் கிடைக்காமல் தவிப்பவர்களுக்காகவே சீலிங்கிளாத் டிரையர், தினமலர் கண்காட்சியில் புது வரவாகவந்துள்ளது.இதனை சீலிங்கில் பொருத்தி வைத்துக்கொண்டால் வீட்டில் உள் அறையே 3 அடியில் துணிகளை உலர வைத்து விடலாம். தினமலர் கண்காட்சியில் புக்கிங் செய்தால் வீடு தேடி வந்து தயார் செய்து கொடுக்கின்றனர்.
வீட்டில் எண்ணெய் ஆடலாம்
உடல் ஆரோக்கியம் கொடுத்து வந்த பல பாரம்பரிய முறைகள் இன்று நம்மிடம் இல்லை. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் மரச்செக்கு எண்ணெய் ஒன்று. ஆனால் சந்தையில் கிடைக்கும் மரக்செக்கு எண்ணெய் கலப்படம், ரசாயனம் கலந்து இருக்குமோ என சந்தேகம் எழுகிறது. தினமலர் கண்காட்சியில் வந்துள்ள ஸ்ரீ அண்ட் கோ ஹாண்ட் திங்க் ஆயில் மிஷின் இருந்தால் நாமே சொந்தமாக வீட்டில் உற்பத்தி செய்ய முடியும். 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த இயந்திரம் கண்காட்சியில் 19 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை விலையில் கிடைக்கிறது.
வந்திருக்கு'தாடி' ஆயில்
சரியான தாடி ஸ்டைல் ஆண்களுக்கு ஒரு நேர்த்தியான லுக்கை கொடுக்கிறது. ஒவ்வொருத்தர் முகத்திற்கு தகுந்த மாதிரி ஸ்டைலான பியர்டு தான் ஆண்களுக்கு அழகு. அப்போது தான் முகத்திற்கும் தோற்றத்திற்கும் கச்சிதமாக இருக்கும். தாடியை கருகருன்னு வளர்ப்பதற்காக கண்காட்சியில் தாடி ஆயில் விற்பனைக்கு வந்துள்ளது. விலை-250
வயர்லெஸ் வாட்டர் பம்பு
குடிநீர் கேன்களில் இருந்து சொட்டுதண்ணீர் கீழே சிந்தாமல் பிடிக்க வயர்லெஸ் வாட்டர் பம்பு கண்காட்சியில் புது வரவாக வந்துள்ளது. ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் எட்டு மணிநேரம் சிந்தாமல் தண்ணீர் பிடித்து குடிக்கலாம். அலுவலகம் மற்றும், வீடுகளுக்கு ஏற்றது.
அசத்தலான அலாரம் 'லாக்'
எப்படிப்பட்டபூட்டுகளை போட்டாலும் அதனை உடைத்துகொள்ளையடித்து சென்றுவிடுகின்றனர். ஆனால் கண்காட்சிக்கு வந்துள்ள அலாரம் லாக் அப்படி இல்லை. பார்ப்பதற்கு சாதாரண பூட்டு போல இருக்கும் அலாரம் லாக்.. தனித்துவமானது. இந்த பூட்டை உடைத்தால் அவ்வளவு தான்.. தொடர்ந்து அதிக சத்தம்எழுப்பிஊரையே கூட்டி உங்க வீட்டு முன் நிறுத்திவிடும். பைக், ஆபிஸ்களுக்கு ஸ்டிராங்கான செக்யூரிட்டி இது.


வலியை போக்கும் கருவிகள் எக்கச்சக்கம்

நின்றால் வலி, நடந்தால் வலி, அமர்ந்தால் வலி, எழுந்தால் வலி. ஒவ்வொரு நாளும், வலியுடன் வாழ்க்கையை வழிநடத்தும் கட்டாயம் நமக்கு. கவலை வேண்டாம், உங்கள் வலி தீர, வழி தந்துவிட்டதுதினமலர் கண்காட்சி.இம்முறைஏராளமான ஆயுர்வேதமசாஜ் கருவிகள் புதுவரவாக கண்காட்சிக்கு வந்துள்ளன.இதமான 'ஹாட் பேக்' மூட்டு வலி, தோள் வலி போன்றவற்றிக்கு உடனே நிவாரணம் தரும் ஹாட் பேக் சந்தைக்கு புதுசு. இதில் உள்ளேவேக்ஸ் சோடியம் கலந்த கலவை திரவமாக இருக்கும். இந்த திரவத்தில் ஒரு காயின் மிதக்கும். அந்த காயினை லேசாக ஒடித்ததும் உடனடியாக சூடாகி திட பொருளாக மாறிவிடும். இதனை கொண்டு 40 நிமிடங்கள் வரை உடம்பில் வலி இருக்கும் இடங்களில் இதமாக ஒத்தடம் கொடுக்கலாம். சூடு தணிந்த பிறகு சுடுநீரில் போட்டால் மீண்டும் திரவமாகி விடும். மூன்று ஆண்டுகள் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
'அலோவெரா' கண்ணாடி "
டென்ஷனில்' சிக்கித்தவிப்பவர்களை 'கூல்' செய்யும், "ஜில் ஜில் "அலோவெரா' கண்ணாடி விற்பனைக்கு வந்துள்ளது. 'ஐ மாஸ்க்' என அழைக்கப்படும் இக்கண்ணாடியை சிறிது நேரம் பிரிட்ஜ்' அல்லது தண்ணீரில் வைத்து, கண் கண்ணாடி போன்று அணிந்து கொண்டால், அதில் உள்ள அலோவெரா, நம் எண்ணங்களை குளிர்ச்சியாக்கிவிடுகிறது. கருவளையம், கண் சுறுக்கம், தலைவலி உள்ளிட்டவற்றிக்கும் இந்த கண்ணாடி உகந்ததாகும். "ஐ மாஸ்க்' என பெயரிடப்பட்டுள்ள இக்கண்ணாடியை வெளியில் வாங்கினால், நிறைய பணம் வரை செலவிட,வேண்டியிருக்கும்.
கால் மசாஜ் கருவி
பாத எரிச்சல், பித்த வெடிப்பு, பாதவலி, குதிகால்வலி, ஆணிக்கால், ரத்த ஓட்டம் பாதிப்பு, சர்க்கரை நோயால் கால் மறுத்தல் உள்ளிட்ட சகல கால் பிரச்னைகளையும் சரி செய்ய கண்காட்சியின் ேஹாம் ஜிம் பிட்னஸ் ஸ்டாலில் கால் மசாஜ் கருவி வந்துள்ளது. நீங்கள் ஹாயாக சேர் போட்டு அமர்ந்து கொண்டுகாலை இந்த மெஷினில் வைத்தால் போதும். சில நிமிடங்களில் பாதத்தில் இருக்கும் வலி பறந்து போய்விடும்.
மேஜிக் மசாஜ் கருவி
காலையில், பைக்கை ஸ்டார்ட் செய்வதில் தொடங்கி, அலுவலகம் முடித்து, இரவில் பைக்கை நிறுத்தும் வரை, நாம் சந்திக்கும் "டென்ஷன்' கொஞ்சமல்ல. இதனால் நாம் சந்திக்கும் கழுத்து வலி, முதுகு வலி, உடல் வலி, கால் வலி, குதிகால் வலி, தலைவலிக்கு தீர்வாக மேஜிக் மசாஜ் கருவியை 'டெலி புளு ஐடியா' மார்க்கெட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. உடம்பில் உள்ள எல்லா வலிகளையும் நீங்களே மசாஜ் செய்து கொண்டு துரத்தி அடிக்கலாம்.
ஆப்பிள் மசாஜ் கருவி
டால்பின் வடிவில் இருக்கும் ஆப்பிள் மசாஜ் உங்களுக்கு நீண்ட நாளாக தொந்தரவு கொடுத்து வரும் முதுகு வலி, கால் வலி பிரச்னையை சரி செய்கிறது. முழு உடல் மசாஜ் கருவிகளும் இந்த அரங்கில் அசத்தலாக விற்பனைக்கு வந்துள்ளது. அலுவலகம், வேலைக்கு செல்வோர்மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் முதல், வீட்டு வேலைகளை தாங்கி நிற்கும் குடும்பத் தலைவிகள் வரை, "டென்ஷன்' என்ற பூதத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்றிட தினமலர் கண்காட்சிக்கு வாங்க.... வலி தீர்ந்து, மகிழ்ச்சியுடன் ஜாலியாக"ஷாப்பிங்' செய்யுங்க.


ஜாலியோ ஜாலி
இனியஸ்ரீ: எனக்கு எல்லா விளையாட்டும் பிடிச்சிருக்கு. ஹேப்பிபன்சிட்டிக்குள்ள போயி நல்லா சுத்தி பார்த்தேன். அதுல இருக்குற சறுக்கு பாதையில சரசரவென சறுக்கி வந்தேன். என்னோட இந்தசிட்டிக்குள்ள வந்த பசங்களும் எனக்கு பிரண்ட்ஸ் ஆயிட்டாங்க. திரும்பவும் இங்கே வரணும்னு மம்மிகிட்டசொல்லி இருக்கேன்; அதனால நாளைக்கும் வருவேன்.
தன்ஷிக்: குட்டி தீம்ஸ் பார்க் போல செமத்தியான கேம்ஸ்கள் இருக்கு. எல்லாம் கேம்ஸ்களும் பிடிச்சிருக்கு. ஒரே நாளில் பலகேம்ஸ் விளையாடிட்டு வந்திருக்கேன். ஜாலியோ, ஜாலி... பான் பான் ஐஸ்கிரீம் சூப்பர்
ஆதர்ஷ்: இந்தமுறை கண்காட்சியில் விர்ச்சுவர் கேம்ஸ்கள் அனைத்தும்செம திரிலிங்.. அதே நேரத்தில் சவாலான கேம்கள். அப்படியே தடைகளை தாண்டிகிட்டு போய்கிட்டே இருந்தேன். கேமில் நுழைந்ததும்புது உலகில் பறப்பது போன்று இருந்தது. மறக்க முடியாத அனுபவம்.மீண்டும் வந்து விளையாடி கலக்குவேன்...
தனிமா: மியூசிக் பன் சிட்டிகலர் புல்லாஇருந்துச்சு; உள்ளே போயி ஜம்பெல்லாம் பண்ணினேன். பங்களா உயரத்துக்கு போயி, மேலே இருந்து கீழே பார்த்தேன் நல்லா இருந்துச்சு. அடுத்து வாட்டர் போட்ல சொய்ங், சொய்ங்குன்னு வேகமா போயிட்டு வந்தேன்.


பார்வையற்றோர் கைவண்ணத்தில்...
தினமலர் எக்ஸ்போவில், வேப்பமரத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவ குணமுடைய, டீ ஸ்பூன் முதல் அனைத்து வகை கரண்டிகள், சீப்புகள், காய்கறி வெட்டும் கட்டர்கள் மற்றும் வீட்டை அலங்கரிக்கும் கிளி, மைனா, புறா, பருந்து உள்ளிட்ட பொருட்கள், 'டி' அரங்கில் உள்ள பார்வையற்றோர் ஸ்டாலில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கோவையில் இயங்கும் இந்திய ஏழைகள் என்னுடையவர்கள் என்ற டிரஸ்ட்டை சேர்ந்தவர்களால் இப்பொருட்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், வித விதமான சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள் ரூ. 20 முதல் ரூ. 200 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. ஜேக்கப் என்பவர் தலைமையில் 5 பேர் கண்காட்சியில் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூறுகையில், பார்வையற்றவர்களுக்கு கண்கள் தான் இல்லை, கை கால்கள் நன்றாக உள்ளது, உழைத்து வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றனர்.Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X