அரசியல் செய்தி

தமிழ்நாடு

வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க., சார்பில் ரூ 5 லட்சம்

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை: 'பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு, தி.மு.க., சார்பில், ஐந்து லட்சம் ரூபாய், நிதியுதவி வழங்கப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:களியக்காவிளை சோதனை சாவடியில், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சன் குடும்பத்திற்கு, தி.மு.க., சார்பில், ஐந்து லட்சம் ரூபாய், நிதியுதவி அளிக்கப்படும். போலீஸ் அதிகாரிகள் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை, அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டிருக்கிறது. எனினும், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில், தமிழகம் முதலிடம் எனக் கூறி, அ.தி.மு.க., ஆட்சியினர் தங்களை ஏமாற்றிக் கொள்கின்றனரோ இல்லையோ, தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.வில்சன் கொல்லப்பட்ட வழக்கில், விரைந்து விசாரணையை முடித்து, குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குரிய தண்டனை கிடைக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்று, காவல் துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது, இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.சோதனை சாவடிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, அங்கு பணியில் இருப்போருக்கு, எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், டி.ஜி.பி., உடனடியாக செய்ய வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X