பொது செய்தி

தமிழ்நாடு

'நபார்டு' உதவியில் சேமிப்பு கிடங்கு

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில், 'நபார்டு' வங்கி நிதி உதவியில், கூட்டுறவு துறை, மூன்று சேமிப்பு கிடங்குகளை அமைக்க முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அவற்றில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள், ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்படுகின்றன.புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட ஊர்களில், கூட்டுவு துறை, தலா, 500 டன் கொள்ளளவில், மூன்று கிடங்குகளை, 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் நிதி உதவியில் அமைக்க உள்ளது. ஒவ்வொரு கிடங்கும், தலா, 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X