பொது செய்தி

இந்தியா

சதுப்பு நிலங்கள் பட்டியல் வெளியிட மத்திய அரசு உத்தரவு

Added : ஜன 12, 2020
Advertisement

மாநில அரசுகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட சதுப்பு நிலங்களின் விபரங்களை, மூன்று மாதங்களுக்குள் பட்டியலிட்டு, ஆறு மாதங்களுக்குள், சட்ட பூர்வ அறிக்கையாக வெளியிட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

நீர் நிலைகளுக்கு அடுத்தபடியாக, நிலத்தின் மேல் மட்ட நீர்வளத்தை பாதுகாப்பதில், சதுப்பு நிலங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மழைக்காலங்களில், வெள்ளத்தடுப்பு பகுதியாக இவை உள்ளன. இதனால், சதுப்பு நிலங்களுக்கு உயர் முக்கியத்துவம் அளித்து பாதுகாக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக, மாநில அளவில் சதுப்பு நில ஆணையங்கள் ஏற்படுத்த உத்தரவிட்டது. இதன்படி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், சதுப்பு நில ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதையடுத்து, சதுப்பு நிலங்கள் பாதுகாப்புக்கான வழிமுறைகளை, மத்திய அரசு இறுதி செய்து வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்தவும், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.அதன் விபரம்: மாநில அரசுகள், அந்தந்த பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் பட்டியலை, வழிகாட்டி விதிகள் வெளியான நாளில் இருந்து, மூன்று மாதங்களில் தயாரிக்க வேண்டும். இந்த பட்டியலை சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு சட்டப்படி, ஆறு மாதங்களுக்குள் அறிவிக்கையாக வெளியிட வேண்டும்.மேலும், சதுப்பு நிலங்களின் தற்போதைய நிலவரத்தை, டிஜிட்டல் ஆவண பதிவாக, பதிவு செய்ய வேண்டும். சதுப்பு நிலங்களின் எல்லைகளையும் வரையறுக்க வேண்டும்.மாநில அளவிலும், அந்தந்த சதுப்பு நிலங்கள் அளவிலும், தனித்தனி செயல் திட்டங்களை தயாரிக்க வேண்டும். சதுப்பு நிலங்களை சுற்றி நடக்கும் விதிமீறல்களை, நெறிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X