பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் சூரியசக்தி மின் மீட்டர் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க வசதி

Added : ஜன 12, 2020
Advertisement

மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்தவர்கள், அந்த மின்சாரத்தை கணக்கிடும் மீட்டர் பெறுவதற்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் சேவையை, மின் வாரியம் துவக்கியுள்ளது.

தமிழகத்தில், வீடுகள்,கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டடங்களில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப் படுகின்றன. இரவு மற்றும் மழை காலங்களில், சூரியசக்தி மின்சாரம் கிடைக்காது. இதனால், கட்டடங்களில், சூரியசக்தி மின்சாரம் அமைத்தாலும், மின் வாரிய மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது.கட்டட உரிமையாளர்கள், சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம்.இதற்காக, எவ்வளவு மின்சாரம் வழங்கப்படுகிறது என்ற விபரத்தை கணக்கிட, வாரியம் சார்பில், சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ள கட்டடங்களில், 'பை டைரக் ஷனல்' என்ற, மீட்டர் பொருத்தப் படுகிறது.இந்த மீட்டரைப் பெற, வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்க வேண்டும். பின், வாரிய ஊழியர்கள், மின் நிலையத்தை பார்வையிட்டு மீட்டர் வழங்குவர். இந்த நடைமுறையால், மீட்டர் வழங்க, 'ஆதாயம்' எதிர்பார்ப்பதுடன், வேண்டுமென்றே, தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்தன.

தற்போது, இந்த மீட்டர் பெறுவதற்கு, வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அந்த சேவையை பெற விரும்புவோர், இணையதளத்தில் உள்ள, 'சோலார் ரூப்டாப்' பகுதிக்கு சென்று, ஏற்கனவே உள்ள, மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும்.

அதில், ஏற்கனவே புதிய மின் இணைப்பு பெற, வாரியத்திடம் வழங்கிய விபரங்கள் தெரியும். சூரியசக்தி மீட்டருக்கு மட்டும் விண்ணப்பித்தால் போதும். அந்த விபரம், இணைய தளம் வாயிலாகவே, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, மீட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த முறையில், விண்ணப்பிக்கும் நேரம் உள்ளிட்ட, அனைத்து விபரங்களும், கம்ப்யூட்டரில் பதிவு ஆவதால், குறிப்பிட்ட காலத்தில், மீட்டர் வழங்கப்படும்
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X