பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சி

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 மாவட்ட புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சி

ராமநாதபுரம்:பள்ளிக்கல்வித்துறை மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சி நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 50க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு படைப்புகளில் 90 அறிவியல் கண்டு பிடிப்புகளை காட்சிப்படுத்தினர். தானியங்கி ரயில்வே நடை மேடை, பசுமை வீடு, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி என பல்வேறு கண்டுபிடிப்புகள் கவனத்தை ஈர்த்தன.

இந்த படைப்புகள் ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது. 90 படைப்புகளில் சிறந்த படைப்புகளாக 18 மாணவர்களின் படைப்புகள் தேர்வு பெற்றது. இதில் 9 மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சிக்கு ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பங்கேற்பர். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பால்கண்ணன், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X