பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் தொடர் விடுமுறை: மின்கட்டணத்திற்கு அவகாசம் கிடைக்குமா

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை: பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த, தமிழக மின் வாரியம் அவகாசம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, நுகர்வோர்களிடம் எழுந்து உள்ளது.
வீடுகளில், மின் வாரியம் சார்பில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 நாட்களுக்குள், மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மீண்டும், மின் வினியோகம் வழங்கப்படும். வாரிய இணையதளம் உட்பட, 'டிஜிட்டல்' முறையில் கட்டணம் செலுத்தும் வசதி இருந்தும், பலரும், குறிப்பாக, மின் ஊழியர்களே, மின் கட்டண மையங்களில் செலுத்த முன்னுரிமை தருகின்றனர்.பொங்கலை முன்னிட்டு, வரும், 15, 16, 17 ஆகிய நாட்கள் விடுமுறை. இதனால், பலரும் பொங்கலை கொண்டாட, நேற்று முதல், சொந்த ஊர்களுக்கு சென்றபடி உள்ளனர். வரும், 18ம் தேதி, மின் வாரியத்திற்கு வேலை நாளாக இருந்தாலும், சொந்த ஊர் சென்றவர்கள், அதற்கு அடுத்த நாள் தான், ஊருக்கு திரும்ப திட்டமிட்டு உள்ளனர்.

இதனால், 13, 14, 18ம் தேதிகளில், மின் கட்டணம் செலுத்த கடைசி நாளாக உள்ளவர்கள், 20ம் தேதி செலுத்தும் போது, அபராதத்துடன், கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.எனவே, அபராதம் இன்றி, கட்டணம் செலுத்த, மின் வாரியம், அவகாசம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, நுகர்வோர்களிடம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X