பொது செய்தி

தமிழ்நாடு

'கேபிள்' மின் வினியோகம் பணிகளை முடிக்க, 'கெடு'

Added : ஜன 12, 2020
Advertisement

தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம் உட்பட, 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. சென்னையில் சில இடங்கள் தவிர, மற்ற பகுதிகளில், மின் கம்பங்கள் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால், மழை, புயலின் போது, கம்பங்கள் சாய்ந்து விழுவதால், மின் தடை, மின் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், சாதாரண மழைக்கே, மின் கம்பங்கள் சாய்ந்து விழுகின்றன. இதையடுத்து, உலக வங்கி நிதியுதவியுடன், கடலோர மாவட்டங்களில், மின் கம்பங்களுக்கு பதில், தரைக்கு அடியில், 'கேபிள்' பதித்து, அதன் வாயிலாக, மின் வினியோகம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி, கடலுாரில், அந்த பணிகள், 400 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், உலக வங்கி, 360 கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறது. இரு மாவட்டங்களிலும், 2018 டிசம்பரில் துவங்கிய, கேபிள் வாயிலான மின் வினியோக பணிகளை முடிக்க, டிசம்பர் வரை அவகாசம் உள்ளது.இந்நிலையில், அந்த பணிகளை, மார்ச் மாதத்திற்குள் முடிக்கும்படி, மின் வாரியத்திற்கு, உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. இதனால், அவற்றை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X