பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கவுன்சிலர் 'ஆப்சென்ட்' ஒரு ஓட்டு கிடைக்காததால் தேர்தல் ஒத்திவைப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

வாடிப்பட்டி, வாடிப்பட்டி ஒன்றிய தலைவர்தேர்தல் அ.தி.மு.க., அதிருப்தி கவுன்சிலரால் ஒத்திவைக்கப்பட்டது.இங்குள்ள, 14 ஒன்றியகவுன்சிலரில்அ.தி.மு.க.,- 7, தி.மு.க.,- 6, சுயே.,-1 வெற்றி பெற்றன. ஒன்றியதலைவர் பதவிக்கு8 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியசுயே., துணை தலைவர் பதவியை உறுதி செய்த பின் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளித்தார்.இந்நிலையில், ஏற்கனவே தலைவர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த 11வது வார்டு அதி.மு.க., கவுன்சிலர் வசந்தகோகிலா நேற்று நடந்த தேர்தலில் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.,- 6., சுயே.,- 1 மட்டுமே பங்கேற்றனர். இதனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X