பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் படகு போட்டி

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும், 16ம் தேதி, சுற்றுலாத் துறை சார்பில், படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.தமிழக சுற்றுலாத் துறை, உள்நாட்டு பயணியரை கவரும் வகையில், புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, படகு போட்டியை அறிவித்து உள்ளது.தமிழக சுற்றுலாத்துறைக்கு சொந்தமான, சென்னை அருகேயுள்ள முட்டுக்காடு, முதலியார்குப்பம்; ஊட்டி - பைகாரா, கொடைக்கானல் ஆகிய படகு குழாம்களில், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, சுற்றுலா பயணியருக்கான படகு போட்டி நடத்தப்படுகிறது.இதில், துடுப்பு படகு, மிதிப்படகு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில், முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X