பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியது தி.மு.க., தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க., கவுன்சிலர்

Added : ஜன 12, 2020
Advertisement

மதுரை, மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர்கள் பதவியை தி.மு.க., கைப்பற்றியது.மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தேர்தலில் தி.மு.க., - 13, காங்., -1, அ.தி.மு.க., - 4 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். தலைவர், துணை தலைவர் தேர்தலில் பங்கேற்க காலை 10:30 மணிக்கு தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் வந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வருகைக்காக காத்திருந்தனர். காலை 11:15 மணிக்கு அவர்கள் வந்தனர்.தேர்தல் நடத்தும் அதிகாரி முருகானந்தம், துணை அலுவலர் சோனா பாய், கண்காணிப்பாளர் ஷேக் அயூப் முன்னிலையில் தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் 5வது வார்டு (காதக்கிணறு) மணிமேகலை தலைவராக போட்டியின்றி தேர்வானார்.. துணை தலைவர் தேர்தலில் 9வது வார்டு (ஒத்தக்கடை) தி.மு.க., கவுன்சிலர் பாலாண்டி போட்டியின்றி தேர்வானார்.கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சிமதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க., -5, தி.மு.க., -5, காங்., - 1, வி.சி.க.,- 1, சுயே.,- 1 ஆகியோர் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர். தலைவர் தேர்தலையொட்டி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முதலில் வந்தனர். அவர்களை அடுத்து தி.மு.க., கூட்டணியினர் வந்தனர்.அலுவலகத்திற்கு வெளியே 5வது வார்டு (கோவில்பாப்பாகுடி) அ.தி.மு.க., கவுன்சிலர் செல்லப்பாண்டி தீக்குளிக்க முயன்றார். அவர் கூறுகையில், "12 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் செந்தில்குமாரை யாரோ கடத்தியுள்ளனர். அவரை கண்டுபிடித்த பின் தலைவர் தேர்தல் நடத்த வேண்டும்" என்றார்.ஆனாலும் 50 சதவீத்திற்கும் மேல் கவுன்சிலர்கள் வருகை இருந்ததால் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்சித் முன்னிலையில் தி.மு.க., சார்பில் 13வது வார்டு (வீரபாண்டி) வீரராகவன், அ.தி.மு.க., சார்பில் 2வது வார்டு (தேனுார்) முருகேசன் மனுதாக்கல் செய்தனர். இவர்கள் முறையே 8 மற்றும் 3 ஓட்டுக்கள் பெற்றனர்.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் செல்லப்பாண்டி, செந்தில்குமார் ஆகியோர் ஓட்டளிக்கவில்லை. இதையடுத்து தலைவராக வீரராகவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. துணை தலைவராக 8 வது வார்டு (வெளிச்சநத்தம்) தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக்ராஜா தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X