குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற இளம்பெண் டி.எஸ்.பி., ஆனார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற இளம்பெண் டி.எஸ்.பி., ஆனார்

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (1)
 குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற  இளம்பெண் டி.எஸ்.பி., ஆனார்

திருவாடானை:குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற இளம் பெண் டி.எஸ்.பி., ஆனார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவடிமதியூர் கிராமத்தைசேர்ந்தவர் ராஜேந்திரன். திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது மகள் ராஜ பிருந்தா 26, குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று சென்னையில் உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கை துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.

தற்போது குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று போலீஸ் டி.எஸ்.பி., ஆகி உள்ளார். இது குறித்து ராஜபிருந்தா கூறியதாவது:எனது மூதாதையர்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். திருவாடானை ராஜன் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளியிலும், பொறியியல் கல்லுாரியிலும் படித்தேன். குரூப் 1 தேர்வில் 85 வது ரேங்க் எடுத்து டி.எஸ்.பி., பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.மாணவிகள் தன்னம்பிக்கையுடன் விடா முயற்சியுடன் படித்தால் எந்த தேர்விலும் நிச்சயம் வெற்றி பெறலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X