பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம், மண்டபம் ஒன்றிய தலைவரை கைப்பற்றிய தி.மு.க.,

Added : ஜன 12, 2020
Advertisement
 ராமநாதபுரம், மண்டபம் ஒன்றிய  தலைவரை கைப்பற்றிய தி.மு.க.,

ராமநாதபுரம்:ராமநாதபுரம், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிகளை தி.மு.க., கைப்பற்றியது.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்களில் தி.மு.க., கூட்டணி 8 இடங்களையும், அ.தி.மு.க., கூட்டணி 4 இடங்களையும் கைப்பற்றியது. ஒன்றிய தலைவருக்கு தி.மு.க., வேட்பாளராக கட்சியால் மனோகரன் அறிவிக்கப்பட்டார். ஆனால் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

துணை தலைவராக தி.மு.க., வேட்பாளர் ராஜவேணி தேர்வு செய்யப்பட்டார்.மண்டபம் ஒன்றியத்தில் 21 கவுன்சிலர்களில் தி.மு.க., கூட்டணி 12 இடங்களையும், அ.தி.மு.க., கூட்டணி 5, சுயேச்சைக்கள் 4 இடங்களையும் வென்றிருந்தது. 11 ஓட்டுகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றார். துணை தலைவராக தி.மு.க., வேட்பாளர் பகவதிலெட்சுமி வென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X