பொது செய்தி

இந்தியா

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பேட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை

Added : ஜன 12, 2020
Advertisement
 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பேட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை

புதுச்சேரி:தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புனித பேட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவிகள் சமர்பித்த ஆய்வு பி.பிளஸ் சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் தொடர்புக்கான தேசிய அறிவியல் கவுன்சில் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது.தேசிய அளவில் நடைபெற்ற 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இவானி யோசு கல்லுாரியில் நடைபெற்றது.இம்மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 657 இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றுத் தங்களின் ஆய்வு திட்டங்களைச் சமர்ப்பித்தனர். இதில் புதுச்சேரி புனித பேட்ரிக் மேனிலைப்பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவிகள் சண்முகப்பிரியா, நிவேதித்தா ஆகியோர் “பாசிகளால் மாசடைந்த நீர் நிலைகளைப் புதுமையான முறையில் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் தங்களது ஆய்வு திட்டங்களைச் சமர்ப்பித்தனர்.
இவர்களது ஆய்வுதிட்டம் தேசிய அளவில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு பி.பிளஸ் சான்றிதழ் பெற்றது.புதுச்சேரிமாநிலத்தின் சார்பாகக் கலந்து கொண்டவர்களில் மிக இளம் வயதில் அறிவியல் ஆய்வுத்திட்டம் சமர்ப்பித்து சாதித்த மாணவிகள் சண்முகப்பிரியா, நிவேதித்தா மற்றும் வழிகாட்டி ஆசிரியை நீலா ஆகியோரை பள்ளிதுணை முதல்வர் அல்போன்ஸ்ஹில்டா, நிர்வாக அதிகாரி மார்ட்டின், இளநிலை நிர்வாக அதிகாரி முரளிதரன் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சீத்தாராமன், முத்தானந்தம் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X