பொது செய்தி

இந்தியா

தென்மண்டல பேண்டு இசை போட்டி அமலோற்பவம் பள்ளிக்கு மூன்றாம் பரிசு

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 தென்மண்டல பேண்டு இசை போட்டி அமலோற்பவம் பள்ளிக்கு மூன்றாம் பரிசு

புதுச்சேரி:தென்மண்டல அளவிலான பேண்டு இசை வாத்திய போட்டியில் புதுச்சேரி அமோற்பவம் மேனிலைப் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது.
இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த நவம்பரில் மாநில அளவிலான பேண்டு வாத்திய இசை போட்டியில் அமலோற்பவம மேனிலைப் பள்ளி ஆடவர், மகளிர் பிரிவில் தனித்தனியே முதலிடம் பெற்றனர். இந்த வெற்றியால் தென்மண்டல போட்டிக்கு இம்மாணவ மாணவியர்கள் தகுதி பெற்றனர்.அதனைத் தொடர்ந்து அண்மையில் நடந்த தென்மண்டல பேண்டு வாத்திய இசைப்போட்டி யில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, லட்சத் தீவு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் புதுச்சேரி அமலோற்பவம் மேனிலைப் பள்ளி மாணவ மாணவிகள் தனித்திறமையை வெளிப்படுத்தி மூன்றாம் இடம் பிடித்தனர்.தென் மண்டல போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களை பள்ளியின் முதுநிலை முதல்வர் லுார்துசாமி பாராட்டினர்.புதுச்சேரிக்கு பெருமை சேர்ந்த அமலோற்பவம் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X