தமிழ்நாடு

உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் பதவி அ.ம.மு.க., உதவியுடன் தி.மு.க., வெற்றி

Added : ஜன 12, 2020
Share
Advertisement



உசிலம்பட்டி, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை அ.ம.மு.க., உதவியுடன் தி.மு.க., கைப்பற்றியது. துணைத்தலைவர் பதவியை அ.ம.மு.க., பெற்றது.
இந்த ஒன்றியத்தில் அ.தி.மு.க., - 5, தி.மு.க., - 5, அ.ம.மு.க., - 2, சுயே., 1 வெற்றி பெற்றது. ஒன்றிய தலைவர் தேர்தலுக்கு தி.மு.க.,வினர், அ.ம.மு.க., வினர் என 7 பேர் தனியாகவும், அ.தி.மு.க., அணியினர் 6 பேர் தனியாகவும் வந்தனர். கூடுதல் கலெக்டர் பிரியங்கா, ஆர்.டி.ஓ., சவுந்தர்யா, ஒன்றிய அலுவலர்கள் தேர்தலை நடத்தினர்.
சுயே., கவுன்சிலர் அமாவாசை,'தி.மு.க., சார்பில் தலைவருக்கு போட்டியிடும் ரஞ்சனி மீது குற்றச்சாட்டு உள்ளதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்' எனகோரிக்கை மனு கொடுத்தார். இது குறித்து உரிய நீதிமன்றம் வாயிலாக தீர்வு காணும்படி அதிகாரிகள் கூறினர்.
இதைதொடர்ந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். சற்று நேரத்தில் மீண்டும் உள்ளே வந்தனர். வந்த வேகத்தில் சுயே., கவுன்சிலர் அமாவாசை அதிகாரிகள் முன்பு இருந்த டேபிளை தள்ளிவிட்டார். தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்றனர்.
தேர்தலை நடத்த இரு தரப்பினருக்கும் அதிகாரிகள் வேட்பு மனு வழங்கினர். அதை அ.தி.மு.க.,வினர் கிழித்து எறிந்தனர்.
இதைதொடர்ந்து உசிலம்பட்டி ஒன்றியக்குழு தலைவராக 7வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரஞ்சனி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. துணைத்தலைவராக அ.ம.மு.க., கவுன்சிலர் பாண்டி தேர்வுசெய்யப்பட்டார்.
தேர்தல் நடந்த போது அ.தி.மு.க., வினர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் 3 மணி நேரத்திற்கும் மேலாக அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X