மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்| Dinamalar

தமிழ்நாடு

மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்

Added : ஜன 12, 2020

மதுரை, "மாணவர்களுக்கு
அறிவியல் ஆர்வத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்," என, மதுரையில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
இன்ஸ்பயர் (அறிவியல் புத்தாக்க விருது) விருதுக்கான மாவட்ட அறிவியல் கண்காட்சி சேதுபதி பள்ளியில் நடந்தது. இதில் 6- 10 ம் வகுப்பை சேர்ந்த 750 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். 76 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சியை சி.இ.ஓ., சுவாமிநாதன் துவக்கி வைத்து பேசுகையில் , "படிக்கும் போதே மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த சிந்தனை பள்ளி பருவத்திலேயே துாண்டிவிட வேண்டும். இதுபோன்ற கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும்," என்றார். தலைமையாசிரியர்கள் தென்கரை முத்துப்பிள்ளை, ராஜசேகர் ஒருங்கிணைத்தனர்.
மாநில போட்டிக்கு தேர்வு: அறிவியல் தொழில்நுட்பத் துறை அலுவலர் டேவிட் பொன்ராஜ், அகமதாபாத் அறிவியல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ரிஜேஷ் மற்றும் பேராசிரியர் குழு சிறந்த படைப்புக்களை தேர்வு செய்தது.
மதுமிதா (நாய்ஸ்
மெட்ரிக்), பிரியா
(சூரப்பட்டி அரசு பள்ளி), குருநாச்சியப்பன் (கேரன் மெட்ரிக்), ரக்ஷிதா (கே.வி.,), பாரதி (பி.கே.என்.,), ஹிதாயத் அஷ்மா
(கே.எம்.ஆர்.,), வசந்தகுமார் (முடுவார்பட்டி அரசு பள்ளி) ஆகியோரின் படைப்புகள்
மாநில போட்டிக்கு தேர்வு பெற்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X