கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதவி உயர்வு பட்டியல் தீயணைப்பு துறைக்கு உத்தரவு

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை: தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரிகள் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை ஆண்டு வாரியாக தயார் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீயணைப்பு துறை பணிகளுக்கான சிறப்பு விதிகளின்படி நிலைய அதிகாரிகள் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை ஆண்டு வாரியாக தயாரிக்கும்படி தமிழக அரசு மற்றும் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி மூவர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மேலும் தற்காலிகமாக அளிக்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்யவும் கோரினர். இம்மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் அரசு தரப்பில் கூடுதல் பிளீடர் புவனேஸ்வரி ஆஜராகினர்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவுநிலைய அதிகாரியாக ௧௭௨ பேருக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக தேவைக்காக 'சீனியாரிட்டி' அடிப்படையில் இந்த தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்காலிக பதவி உயர்வு வழங்கிய உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை.கடந்த ௨௦௧௬ - ௧௭ முதல் ௨௦௧௮ - ௧௯ வரை நிலைய அதிகாரி பணிக்கு ஆண்டு வாரியாக பதவி உயர்வு பட்டியலை அரசு தயார் செய்ய வேண்டும்.

சிறப்பு விதிகளின்படி தகுதியான நபர்கள் அதில் இடம்பெற வேண்டும். பட்டியல் தயாரான பின் பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்க வேண்டும். மூன்று மாதங்களில் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும். 'ரெகுலர்' பதவி உயர்வு வழங்கும் வரை இந்த தற்காலிக பதவி உயர்வு அமலில் இருக்கும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X