பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்

Added : ஜன 12, 2020
Advertisement

டில்லி பல்கலையில் ஏ.பி.வி.பி. பேரணிபுதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து டில்லி பல்கலையில் ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த வன்முறையை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர்களை இடதுசாரி கட்சியினர் வன்முறையில் ஈடுபட வைப்பதாக கூறியும் இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக ஏ.பி.வி.பி. தெரிவித்தது.

ஆயிஷே கோஷுடன் பினராயி சந்திப்புபுதுடில்லி: கேரள முதல்வர் பினராயி விஜயன் டில்லி சென்றுள்ளார். டில்லியில் உள்ள கேரள இல்லத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தலைவர் ஆயிஷே கோஷை பினராயி விஜயன் நேற்று சந்தித்தார். பல்கலை.யில் கட்டண உயர்வு குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு முழு ஆதரவு தருவதாக கோஷிடம் பினராயி உறுதியளித்தார்.

காஸ் தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலிவதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் தொழிற்சாலை மற்றம் மருத்துவ பணிகளுக்கான காஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலையில் நேற்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது காஸ் சிலிண்டர் வெடித்ததில் எட்டு பேர் இறந்தனர்; ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெண் காவலர் தற்கொலைசீதாப்பூர்: உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் கைராபாத் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஷோபா சவுத்ரி 25. இவர் நேற்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னைகள் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பரூக், ஓமரை விடுவிக்க தேசிய மாநாடு கோரிக்கைஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த வருடம் ஆகஸ்ட் 5ல் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட 400க்கும் அதிகமான அரசியல் மற்றம் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் துவக்க பரூக் மற்றும் ஓமரை உடன் விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய மாநாட்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X