பொது செய்தி

இந்தியா

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

புதுச்சேரி:வ.உ.சி., அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
வ.உ.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள் மனிதநேய அறக்கட்டளை சார்பில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கி தரப்பட்டுள்ளது.குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு அளிக்கும் நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ் வரவேற்றார். வ.உ.சி., பள்ளியின் முன்னாள் மாணவர்களான பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பாலமுருகன், மருத்துவ அதிகாரி (சித்தா) சடகோபன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.விழா ஏற்பாடுகளை, அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X