அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெல்லை கண்ணன் ஜாமினில் விடுவிப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

சேலம்: சேலம் சிறையிலடைக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரை வரவேற்க காத்திருந்த காங். கட்சியினர் ஏமாற்றமடைந்தனர்.

பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதுாறாக பேசியதற்காக காங். கட்சியைச் சேர்ந்த நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்கான உத்தரவு நகல் நேற்று காலை சேலம் மத்திய சிறையில் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதும் த.ம.மு.க. - காங். கட்சியினர் வரவேற்க காத்திருந்தனர். ஆனால் சிறை பின்வாசல் வழியாக கண்ணனை அனுப்பிய போலீசார் பா.ஜ.வினரால் பிரச்னை ஏற்படும் எனக்கூறி யாருக்கும் தெரியாமல் ஐந்து ரோடு ஏ.வி.ஆர். ரவுண்டானா வரை அழைத்துச்சென்றனர். அங்கிருந்து அவர் நெல்லை புறப்பட்டார். இதனால் வரவேற்பு கொடுக்க காத்திருந்த கட்சி பிரமுகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X