தமிழ்நாடு

மூன்று லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Added : ஜன 12, 2020
Advertisement

மதுரை, மதுரை மாவட்டத்தில் ஜன., 19 ல் நடக்கும் சிறப்பு முகாம்களில் மூன்று லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கூட்டம் கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது. சுகாதார துணை இயக்குனர் பிரியா, நகர்நல அலுவலர் செந்தில்குமார், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சேதுராமன், நேரு யுவ கேந்திரா உதவி இயக்குனர் செந்தில்குமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, பி.ஆர்.ஒ., தங்கவேலு, உதவி அலுவலர் நவீன் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது: காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில் பிறந்தது முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தை
களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். செங்கல் காளவாசல், பெருநகரத் திட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், நரிக்குறவர்கள் குழந்தைகளுக்கும் வழங்கப்படும்.
நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையத்தில் இதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்படும். இப்பணியில் 7,412 பேர் ஈடுபடுகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X