சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ள உறவால் மகனை கொன்ற தாய்

Added : ஜன 12, 2020
Advertisement

பேரையூர், டி.கல்லுப்பட்டி அருகே வி.குச்சம்பட்டியில் கள்ள உறவை பார்த்த ஐந்து வயது மகனை கொன்று விஷப்பூச்சி கடித்ததாக நாடகமாடிய தாய், சித்தப்பா கைது செய்யப்பட்டனர்.
வி.குச்சம்பட்டியை சேர்ந்த கொத்தனார் ராம்குமார் 26. மனைவி ஆனந்தஜோதி 25, விருதுநகரில் உள்ள கடையில் பணி செய்தார். மகன் ஜீவா 5, மகள் லாவண்யா 3.
ஜீவா அங்கன்வாடியில் படித்தார். அவரை விஷப்பூச்சி கடித்து விட்டது என நேற்று முன்தினம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். கழுத்தில் கயிறு இறுக்கிய தடம், நகக்கீறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ராம்குமார் புகாரின்படி டி.எஸ்.பி. மதியழகன், இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, போலீசார்
விசாரித்தனர். இதில் தாய் ஆனந்தஜோதி, சித்தப்பா மருதுபாண்டி சேர்ந்து
அவரை கொன்றது தெரிந்தது.போலீசார் கூறியதாவது: ராம்குமார் சகோதரர் மருதுபாண்டிக்கும், ஆனந்தஜோதிக்கும் கள்ள உறவு இருந்தது. இரு நாட்களுக்கு முன் கள்ள உறவை ஜீவா பார்த்துள்ளார்.
இதனால் பயந்த இருவரும் சேர்ந்து துாங்கி கொண்டிருந்த ஜீவாவின் வாயை பொத்தி, கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொன்றனர்.
பின் விஷப்பூச்சி கடித்ததாக நடித்தனர். இருவரையும் கைது செய்து விட்டோம்.
இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X