அரசியல் செய்தி

தமிழ்நாடு

குமரி மாவட்ட ஊராட்சியில் அ.தி.மு.க., வெற்றி: ஒன்றியத்தில் அ.தி.மு.க., காங்., தலா 3

Added : ஜன 12, 2020
Advertisement

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியை அ.தி.மு.க.,வும், ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க., காங்., தலா மூன்று இடங்களையும், பா.ஜ., இரு இடங்களையும் பிடித்தது. தி.மு.க., போட்டி வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியில் 11 உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர். இதில் அ.தி.மு.க., வின் மெர்லியன்றுதாஸ் ஆறு ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் ரமணி ஐந்து ஓட்டுகள் பெற்றார்.

மொத்தமுள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க., சார்பில் ராஜாக்கமங்கலம் -- ஐயப்பன், தோவாளை- சாந்தினி, அகஸ்தீஸ்வரம்- அழகேசன் காங்கிரஸ் சார்பில் கிள்ளியூர்- கிறிஸ்டல் ரமணிபாய், தக்கலை - அருள்ஆன்டணி, மேல்புறம்- ஞானசவுந்தரிபா.ஜ., சார்பில் குருந்தன்கோடு- அனுஷியா தேவி, முஞ்சிறை- ராஜேஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றனர். திருவட்டாரில் தி.மு.க. போட்டி வேட்பாளர் ஜெகநாதன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த தி.மு.க., அதிகாரபூர்வ வேட்பாளர் பிரேமசுதா தோல்வி அடைந்தார்.

தக்கலை ஒன்றியத்தில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் குலுக்கலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தி.மு.க., 'வாஷ் அவுட்'சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளர் வசந்தகுமார், அப்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெரும் சரிவை சந்தித்துள்ளது. மாவட்ட ஊராட்சியில் ஒரு வார்டில் கூட தி.மு.க., வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால் அ.தி.மு.க., 4, பா.ஜ., 2 இடங்களில் வெற்றி பெற்றதால் தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் காங்கிரஸ் மூன்றிலும், தி.மு.க. திருவட்டார், அகஸ்தீஸ்வரம் இரண்டிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திருவட்டாரில் 12 கவுன்சிலர்களில் தி.மு.க.,5, அ.தி.மு.க.,3, காங்.,2, கம்யூ., பா.ஜ., தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தன. தலைவர் பதவிக்கு சமீபத்தில் தே.மு.தி.க., வில் இருந்து தி.மு.க., வில் இணைந்த ஜெகநாதன் வாய்ப்பு கேட்டார். ஆனால் பிரேமசுதா என்பவரை மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் நிறுத்தினார்.

ஜெகநாதன் ஆறு ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பிரேமசுதா ஐந்து ஓட்டுகள் பெற்றார். ஒரு ஓட்டு நோட்டா ஆனது. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் ஏழு கவுன்சிலர்களில் தி.மு.க., 3, அ.தி.மு.க., 2, காங்., பா.ஜ., தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.ஆனால் அ.தி.மு.க., வேட்பாளர் அழகேசன் நான்கு ஒட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X