தமிழ்நாடு

175 பவுன், ரூ.2.80 லட்சம் கொள்ளை மகன் மற்றும் 'போலி' போலீசார் கைது

Added : ஜன 12, 2020
Advertisement

மதுரை, மதுரை கூடல்
புதுாரில் அரசு ஒப்பந்தக்
காரர் குணசேகரன் வீட்டில் 'போலீஸ்' போல் நடித்து 175 பவுன், ரூ.2.80 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் அவரது முதல் மனைவி மகன் ராஜராஜன் மற்றும் 'போலி' போலீசார் உட்பட மூவர் கைது
செய்யப்பட்டனர்.
கடந்த டிச.,27ல்
வீட்டில் குணசேகரன் இரண்டாவது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருந்தபோது 'போலீஸ்' என்றுக்கூறி ஒரு பெண் உட்பட 5 பேர் வந்தனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறி வீட்டை சோதனையிட்டனர். அப்போது 175 பவுன், ரூ.2.80 லட்சத்தை எடுத்தபோது தடுத்த குணசேகரனை துப்பாக்கியை காட்டி மிரட்டினர். சில சொத்து ஆவணங்
களையும் எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சொத்து ஆவணங்களை எடுத்துச்சென்றதால் அதன் பின்னணியில் குடும்பத்தைச் சேர்ந்தவர் யாராவது இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
மாடக்குளத்தில் உள்ள குணசேகரனின் முதல் மனைவியின் மகன் ராஜ
ராஜனிடம் விசாரித்தபோது அவர்தான் கொள்ளைக்கு திட்டமிட்டது தெரிந்தது. இதுதொடர்பாக அவரையும், கூட்டாளிகள் உமாதேவி, நாகமலைபுதுக்கோட்டை தங்கராஜ் ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். சிலரை தேடி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
குணசேகரன் 2வது திருமணம் செய்து கொண்ட பின், சொத்துக்களை முதல் மனைவியும், மகன் ராஜராஜனும் அனுபவிக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குணசேகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் சொத்தை
அபகரிக்க திட்டமிட்ட
ராஜராஜன் தனக்கு
பழக்கமான உமாதேவி, நண்பர் தங்கராஜ்
உதவியை நாடினார்.
சம்பவத்தன்று ராஜ
ராஜன் தவிர மற்றவர்கள் போலீஸ் உடையணிந்து குணசேகரன் வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்தனர். தங்கராஜ் டி.எஸ்.பி., போல் பேசி நடித்துள்ளார்.
கொள்ளை சம்பவம் வெளியே தெரிந்தால் அதற்கு 'கணக்கு' காட்ட வேண்டியிருக்கும் என தயங்கி ஒருவாரமாக குணசேகரன் புகார் செய்யவில்லை. பிறகுதான் புகார் செய்தார். கைதானவர்களிடம் துப்பாக்கி, நகை, பணம் மீட்கப்பட்டது, என்றனர்.

துப்பாக்கி யாருடையது
கொள்ளையர்கள் தன்னை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குணசேகரன் புகார் செய்திருந்தார். ஆனால் அவர் வீட்டில்தான் துப்பாக்கி இருந்ததாகவும், அதை வைத்து மிரட்டியதாகவும் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் குணசேகரன் தன்னிடம் துப்பாக்கி இல்லை
என திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் துப்பாக்கி யாருடையது என போலீசாருக்கு
குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X