மதுரை, "உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் மக்கள் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்ற வேண்டும்," என, அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தினார்.
மதுரை மேற்கு மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் வெற்றி
பெற்றவர்கள் அமைச்சர் உதயகுமாரை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் பேசுகையில், "தினமும் மக்களை சந்தித்து, அவர்களின் தேவையை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். மக்கள் குறைகள் மற்றும் தேவைப்படும் திட்டங்கள்
குறித்து என்
கவனத்திற்கு கொண்டுவரலாம்.
உள்ளாட்சியில் அ.தி.மு.க.,வின் நல்லாட்சி அமைப்பது தான் லட்சியமாக இருக்க வேண்டும்," என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE