அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப் பெட்டியில் மை ஊற்றிய கவுன்சிலர்

Added : ஜன 12, 2020
Advertisement
ஓட்டுப் பெட்டியில் மை ஊற்றிய கவுன்சிலர்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் போகலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் ஓட்டுப்பெட்டியில் தி.மு.க., கவுன்சிலர் மையை ஊற்றினார். இரு தரப்பு மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போகலுார் ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க., சார்பில் 5 பேரும், இந்திய கம்யூ., பா.ஜ., சுயேச்சை தலா ஒருவர் வெற்றி பெற்றனர். நேற்று ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க., சார்பில் சத்யாவும், சுயேச்சை கவுன்சிலர் ராமசாமியும் போட்டியிட்டனர். கவுன்சிலர்கள் 5 பேர் தங்களது வாக்குகளை அளித்த நிலையில், 6வதாக வாக்களிக்க வந்த தி.மு.க., ஒன்றிய செயலாளரும், கவுன்சிலருமான கதிரவன் ஓட்டு பெட்டியில் மையை கொட்டினார். ஆனால் பெட்டிக்குள் போகாமல் வெளியே மை கொட்டியது.

இதையடுத்து கதிரவனுடன் மற்ற தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து மறியல் தொடர்ந்து சுயேச்சை கவுன்சிலர் ராமசாமி வாக்களித்தார். பா.ஜ., கவுன்சிலர் காளிதாஸ் வாக்களிக்காமல் வெறியேறினார்.

சத்யா 4 வாக்குகளும், ராமசாமி 3 வாக்குகளும் பெற்றதாக தெரிவித்த அதிகாரிகள் வெற்றிக்கான சான்றிதழை வழங்கவில்லை. நீண்ட இழுபறிக்குப் பின் மீண்டும் தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் அதிகாரி கயல்விழி தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர்கள் சத்யா, காளீஸ்வரி, தேன்மொழி, பூமிநாதன் ஆகிய நால்வரும் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். அவர்களுடன் தி.மு.க.வை சேர்ந்த ஏராளமானோர் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தாசில்தார் விஜயகுமார் சமரசம் செய்தார். பின் சத்யா வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், மறு தேர்தல் நடத்தக்கோரி ராமசாமி, காளிதாஸ் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் எதிர் முனையில் ரோடு மறியல் செய்தனர். டி.எஸ்.பி., சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். மதியம் 1:00 மணி மாலை 4:00 மணி வரை நீடித்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X