அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் திமுக - அதிமுக பெற்ற இடங்களில் அதிக வித்தியாசமில்லை!

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (17+ 48)
Advertisement
உள்ளாட்சி, அதிக_வித்தியாசமில்லை, திமுக, அதிமுக, பழனிசாமி, ஸ்டாலின்

இந்த செய்தியை கேட்க

சென்னை : மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. - அ.தி.மு.க. கைப்பற்றியஇடங்களில் பெரிய வித்தியாசமில்லை. மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. 12; அ.தி.மு.க. 14 இடங்களில் வெற்றி பெற்று தேர்தலை முடித்து வைத்தன.

தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை 2ம் தேதி துவங்கி 4ம் தேதி நிறைவடைந்தது. தேர்தல் நடந்த 27 மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 515 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 242 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 272 இடங்களிலும் வெற்றி பெற்றன.

314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 2,199 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி 2363 இடங்களிலும் வெற்றி பெற்றன. புதிதாக வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் 6ம் தேதி பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக நேற்று மறைமுக தேர்தல் நடந்தது.

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அரியலுார், கோவை, சேலம், தர்மபுரி, கடலுார், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், புதுக்கோட்டை, துாத்துக்குடி, விருதுநகர் என 14 மாவட்டங்களில் தலைவர் பதவியை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி யினர் மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலுார், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி என 12 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினர். சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இங்கு இரு கூட்டணியும் சம பலத்தில் இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் அதிகளவில் வெற்றி பெற்றிருந்தும் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் நேற்று இரவு வரை 285 ஊராட்சி ஒன்றியங்களில் முடிவு வெளியானது. இதில் 150 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணியும், 135 ஒன்றியங்களில் தி.மு.க. கூட்டணியும் தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு ஒன்றிய வார்டுகளில் தி.மு.க.வை விட அ.தி.மு.க.வுக்கு குறைந்த அளவிலான கவுன்சிலர்களே உள்ளனர். ஆனாலும் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் பதவிகளை தி.மு.க.வை விட அதிகமாக அ.தி.மு.க.பிடித்துள்ளது.

போதிய உறுப்பினர்கள் வராதது, தேர்தல் அதிகாரி வராதது உட்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக சில ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை, கரூர் உட்பட பல மாவட்டங்களில் அனைத்து ஒன்றிய குழு தலைவர் பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. நேற்று நடந்த மறைமுக தேர்தலை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (17+ 48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
12-ஜன-202019:25:13 IST Report Abuse
Poongavoor Raghupathy The trend shows Edappadi is gaining and Stalin is loosing grounds. Tamilnadu people started understanding the most corrupt DMK and the goodness of Edappadi ADMK. Stalin should now learn to withstand the shocks in 2021 Elections and to serve the people of Tamilnadu effectively without corrupted mind. Congress not only in a sinking ship but also pulling DMK inside their sinking ship. DMK is loosing its luster after the death of Karunanidhi.
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
12-ஜன-202018:59:22 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு என்ன சைடு வாங்குது
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
12-ஜன-202017:40:25 IST Report Abuse
Nallavan Nallavan வென்ற இடங்கள், மறைமுகத் தேர்தல் இவற்றை விட வாக்கு வித்தியாசத்தைக் கவனியுங்கள் ...... காரணம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது ......
Rate this:
Share this comment
Santhosh Gopal - Vellore,இந்தியா
12-ஜன-202019:08:41 IST Report Abuse
Santhosh Gopalஉண்மை. ஏன் என்றால், பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த ஆறு மாதத்தில் நடத்தப்படும், அதில் ஆளும் கட்சியின் பலம் மட்டுமே வெளிப்படும், காரணம் அடுத்த ஐந்து வருடம் ஆளும் கட்சி தான் ஆள போகிறது, எதிர் கட்சிகளுக்கு வாக்களிப்பதால் பயன் இல்லை என்பதால் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே மக்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பர், ஆனால் இப்போது நடந்துள்ள உள்ளாட்சி தேர்தல் முற்றிலும் வித்தியாசமானது. ஆட்சி முடியும் தருவாயில் நடைபெற்றுள்ளது. இப்போது தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 2025 வரை பதவி வகிப்பார்கள் என்பதால் ஆளும் கட்சி பலம் இந்த தேர்தலில் குறைந்துள்ளது காரணம் யார் வேண்டுமானாலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதால்.... திமுக கூட ஆட்சியை பிடிக்கலாம் என்பதாலும் வாக்குக்கள் ஆளும் கட்சிக்கு குறைந்திருக்கலாம், கூடுதலாக தினகரன் பிரித்த வாக்குக்களும் காரணம் திமுக இத்தனை இடங்கள் வெற்றி பெற காரணம், இவை எல்லாம் இருந்தும் அதிமுக இத்தனை இடங்கள் பிடித்துள்ளது என்றால் எதிர்ப்பு அலை அவ்வளவாக இல்லை என்று தான் எடுத்து கொள்ள வேண்டும். சுடலை தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எடப்பாடி கொங்கு மண்டலத்தையே வளைத்துள்ளார், கொங்கு மட்டும் அல்ல, தெற்கில் குமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனீ, புதுக்கோட்டை மாவட்டங்களையும் பிடித்துள்ளார். இது எடப்பாடி அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. இது எடப்பாடி அரசுக்கு மக்கள் பாசிட்டிவாக எடை போட்டுள்ள்ளதாகவே கருதப்படும். உண்மையாகவே எடப்பாடி மகிழ்ச்சியாக தான் உள்ளார். தினகரனை உள்ளே இழுக்கும் பணிகளும் தொடங்கும். பாவம் சுடலை. தினகரானால் தான் இத்தனை இடங்கள் கிடைத்தது, வரும் பொது தேர்தலில் ரஜினி, கமல், ஒரு புறம், மறு புறம் தினகரன் அதிமுக வுடன் கூட்டணி சேர்ந்தால் சுடலை பாவம். காங்கிரஸ் கூட திமுகவுடன் உரசலில் உள்ளது.... சுடலைக்கு ஜாதகம் இல்லை என்பது உண்மை தான் போல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X