ஒளிர்ந்தும் ஒளிதராத சென்டர் மீடியன் விளக்குகள் பாதயாத்திரை பக்தர்கள் பரிதவிப்பு| Dinamalar

தமிழ்நாடு

ஒளிர்ந்தும் ஒளிதராத சென்டர் மீடியன் விளக்குகள் பாதயாத்திரை பக்தர்கள் பரிதவிப்பு

Added : ஜன 12, 2020



ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரத்தில் 'சென்டர் மீடியன்' விளக்குகள் மங்கலான வெளிச்சத்தை வெளிப்படுத்துவதால் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல்- பழநி ரோட்டில், ஒட்டன்சத்திரம் நகருக்குள் ரோட்டின் நடுவில் 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் உயரமாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல விளக்குகள் அநேக நாட்கள் எரிவதில்லை.தப்பித் தவறி எரிந்தாலும், போதுமான வெளிச்சத்தை கொடுப்பது இல்லை. இதனால் விளக்குகள் எரிந்தாலும் ரோட்டுப் பகுதியில் இருள் சூழ்ந்தே காணப்படுவதால், நகர் பகுதியில் இருளின்பிடியில் சிக்கித்தவிக்கிறது.வாகனங்களின் முகப்பு வெளிச்சம் ஒன்றுதான் பளிச் என்று தெரிகிறது. இந்த வெளிச்சத்தில்தான் பாதயாத்திரை பக்தர்கள், சைக்கிள்களில் செல்வோர் ரோட்டை அடையாளம் காண வேண்டிய நிலை உள்ளது. அதிக திறனுள்ள மின் விளக்குகளை அமைத்து, பக்தர்கள், பொது மக்கள் பயனடை யும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X