மாநில அரசை கவர்னர் அவமதிக்கிறார்: இந்திய கம்யூ., குற்றச்சாட்டு

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:தேர்தல் ஆணையர் நியமனத்தில் அரசியலை புகுத்துகிறார் கவர்னர் கிரண்பேடி என, இந்திய கம்யூ., குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில செயலர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை விரைந்து அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், அமைச்சரவை முடிவை மாற்றி தன்னிச்சையாக மாநில தேர்தல் ஆணையர் நியமனத்தில் பா.ஜ., ஆதரவு அரசியலை கவர்னர் கிரண்பேடி புகுத்துகிறார்.அரசியல் சட்டத்தை மதிக்காதது, முடக்குவது, ஜனநாயக அரசுக்கு எதிராக மாநிலங்களை மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் மத்திய பா.ஜ., அரசு ஈடுபட்டு வருகிறது. அதனை புதுச்சேரியில் மத்திய அரசின் துணையுடன் உள்ளாட்சி தேர்தல் ஆணையர் விஷயத்தில் கவர்னர் கடைபிடிக்கிறார்.கடந்த காலத்தில் மாநில அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையரை நியமித்த நடைமுறை உள்ளது. ஆனால், மாநில தேர்தல் ஆணையர் நியமன விஷயத்தில் முதல்வருடன் கலந்தாலோசிக்காமலே மத்திய அரசின் பஞ்சாயத்துக்குள் கவர்னர் தலையிடுவது மாநில அரசை மட்டுமல்ல, மக்களையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, சட்டசபை தீர்மானம், சபாநாயகர் மற்றும் அமைச்சரவைக்கு மதிப்பளித்து கவர்னர் நடந்து கொள்ள வேண்டும்.புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறவில்லை. மக்களாட்சிதான் நடைபெறுகிறது. எனவே உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த கவர்னர் வழி காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X