பொது செய்தி

தமிழ்நாடு

சிறை மீண்டு பதவியேற்றவர்

Added : ஜன 12, 2020
Advertisement

செம்பட்டி,
எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி தலைவராக தேர்வான பாலாஜி, 6 நாட்களுக்குப்பின் நேற்று பதவியேற்றார்.ஆத்துார் ஒன்றியம், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்வானவர் பாலாஜி. பழநியில் நடந்த மோதல் வழக்கில், ஜன. 5ல் போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்ததால் ஜன. 6ல் பதவியேற்பின்போது பங்கேற்கவில்லை. ஊராட்சியின் 9 வார்டு உறுப்பினர்கள் மட்டும் பதவியேற்றனர். எவ்வித ஆரவாரமுமின்றி, எளிமையான முறையில் பதவியேற்பு நடந்தது.பாலாஜி பதவியேற்க தடைகோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட சின்னமவுனம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒரு மனு கொடுத்திருந்தார். ஜாமீனில் வந்த பாலாஜி, நேற்று ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜ், முன்னிலையில் பொறுப்பேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X