ஆட்டோ நல வாரியம் அமைக்க ஆலோசனை கூட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement
 ஆட்டோ நல வாரியம் அமைக்க ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி:புதுச்சேரி மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு, தெற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்றச் சங்க தலைவர் அண்ணா அடைக்கலம் வரவேற்றார். செயலர் அன்பழகன், பொருளாளர் காயாரோகணம், துணைத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் சுகுமார், மே 1ம் தேதி சென்னையில் நடக்க உள்ள மண்டல மாநாடு, புதுச்சேரியில் நடத்தப்பட உள்ள மாவட்ட மாநாடு குறித்து பேசினார்.வெங்கடேசன் எம்.எல்.ஏ., தெற்கு மாநில தி.மு.க., துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை சீரமைத்து மீண்டும் இயக்க வேண்டும்.
நலிவடைந்துள்ள பாரதி, சுதேசி, ஏ.எப்.டி., மில்களுக்கு நவீன இயந்திரங்கள் வாங்கி தந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.ஏ.எப்.டி., தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உடனடியாக செலுத்த வேண்டும். விருப்ப ஓய்வு பெறும் மில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பண்டிகைக்கால ஊக்கத் தொகை ரூ.2,000 உயர்த்தி வழங்க வேண்டும். பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணி பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். ஆட்டோ நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X