தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement

நத்தம், நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழும வளாகத்தில் அனைத்து கல்லுாரிகள் சார்பில் பொங்கல் விழா நடந்தது.கல்விக்குழும செயல் இயக்குனர் ஷியாம் உமாசங்கர் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து அனைத்து துறைகள் சார்பில் 81 பொங்கல் வைக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பங்கேற்ற கரகாட்டம், ஒயிலாட்டம், உறுமி மேளம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து வழிபாடு செய்யப்பட்டது. மைதானத்திற்கு வரவழைக்கப்பட்ட சுற்றுப் பகுதியை சேர்ந்த காளை மாடுகளுக்கு பொங்கல் கொடுத்து மரியாதை செய்யப்பட்டது. பேராசிரியர்கள் மற்றும் மற்றும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். கல்லுாரி முதல்வர்கள் சுந்தரராஜன், சரவணன், ஆனந்த், தாமரைச்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வேடசந்துார்:

சாய்பாரத் கல்வி நிறுவனங்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தேவராட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும், முளைப்பாரி ஊர்வலம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. காளைமாடுகளுக்கு பொங்கல் உணவூட்டினர். கல்லுாரி நிர்வாக அலுவலர் ஸ்டாலின், செயல் அலுவலர் நாகேந்திர குமார் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர்கள் வில்சன், சாந்தி, துணை முதல்வர் திலகவதி, பேராசிரியர் தேசிங்குராஜன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X