சமாதானப்படுத்த முயற்சி: ஹாரியுடன் பேச்சு

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள இளவரசர் ஹாரியுடன், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் சமரச பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.



latest tamil news



பிரிட்டன் அரசக் குடும்பத்தின் இளவரசரான ஹாரி, 35, அவருடைய மனைவியும், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகையுமான, மேகன், 38, ஆகியோர், அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக, சமீபத்தில் அறிவித்தனர்.இது, பிரிட்டன் ராணியான இரண்டாம் எலிசபெத், அவருடைய மகனும், ஹாரியின் தந்தையுமான இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவில் மாறி மாறி தங்க உள்ளதாக, ஹாரி கூறியுள்ளார். அவருடைய, எட்டு மாதக் குழந்தை ஆர்ச்சி, தற்போது, கனடாவில் உள்ளது. குடும்பத்தில் இருந்து வெளியேறும் அறிவிப்பை வெளியிட்ட உடன், மேகனும், கனடா சென்றுவிட்டார்.ஹாரியும் கனடா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அரச குடும்பத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவதற்கான நடைமுறைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.இதற்கிடையே, ஹாரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசக் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஹாரியுடன், குடும்பத்தின் சில மூத்த உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இதில் முடிவு எட்டப்படவில்லை.


latest tamil news



அதனால், தனது கனடா பயணத்தை ஹாரி ஒத்தி வைத்துள்ளார்.'பிரிட்டன் ராணி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாயவரத்தான் - chennai,இந்தியா
12-ஜன-202015:15:39 IST Report Abuse
மாயவரத்தான் இவர்களின் முன்னோர்கள்தான் இந்தியாவை நசுக்கியவர்கள்,இந்தியாவின் இன்றய மதப்பிரசனை உட்பட ஏராளமான பிரச்சனைகளுக்கு காரண கர்த்தாக்கள். இந்தியாவை பிரிந்தவர்கள்,கோடிக்கணக்கான இந்தியர்களை பட்டினி போட்டு கொன்றவர்கள். வினைப்பயன் யாரையும் விடாது.
Rate this:
Cancel
S A Sarma - Hyderabad,இந்தியா
12-ஜன-202010:55:56 IST Report Abuse
S A Sarma இந்த இளம் தம்பதிகள் , தமிழ் தொலைகாட்சி சீரியல் பார்த்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel
12-ஜன-202010:52:27 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை ஒத்து வராத ராஜகுடும்ப வாரிசுகளை சத்தமின்றி ஜோலியை முடிப்பது அவர்கள் வழக்கம், பிரித்தானிய அரசகுடும்ப வரலாறில் பலர் கனவுக்கும் ராஜாங்கத்திற்கும் இடையே சிக்கி பலியானோர் பலருண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X