சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமதுரையில் அ.தி.மு.க.,வினர் மறியல்

Added : ஜன 12, 2020
Advertisement

வடமதுரை,வடமதுரையில் ஒன்றிய தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தியான அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரின் ஆதரவாளர்கள் ரோடு மறியல் செய்தனர்.வடமதுரை ஒன்றியத் தலைவர் பதவி பெண்(பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இங்குள்ள 12 வார்டுகளில் அ.தி.மு.க.-8, தி.மு.க-2, சுயே.,-2ல் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., அணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமியின் மனைவி பி.தனலட்சுமி (பிலாத்து), ஒன்றிய செயலாளர் லட்சுமணனின் மருமகள் கே.தனலட்சுமி (புத்துார்) ஆகியோர் ஒன்றியத் தலைவர் பதவியை பெற முயன்றனர்.தேர்தலுக்கு முன்னரே பல வேட்பாளர்களுக்கும் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி தரப்பு 'ஆதரவு' வழங்கியிருந்தது. இதனால் நேற்று போட்டியின்றி பி.தனலட்சுமி தேர்வானார். ஒன்றிய செயலாளரின் மருமகள் கே.தனலட்சுமி, 2 தி.மு.க.., கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தியான அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரின் ஆதரவாளர்கள் அலுவலகம் அருகில் மறியல் செய்தனர். பிரசாரத்தின்போது, 'புத்துாருக்கே ஒன்றிய தலைவர் பதவி' என கூறியிருந்ததாகவும், அதனால் அமைச்சர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் மருதராஜ், பரமசிவம் எம்.எல்.ஏ., ஆகியோர் வரும்வரை மறியலை கைவிட மாட்டோம்' என்றனர். போலீசார் கைது செய்வதாக கூறியதால் கலைந்தனர். மாலையில் நடந்த துணை தலைவர் தேர்தலில் கே.தனலட்சுமி தேர்வு செய்யப்பட்டதால் தீர்வு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X