திண்டுக்கல் ஒன்றிய தலைவர் தேர்தலில் தகராறு; வேட்பு மனு கிழிப்பு திண்டுக்கல்லில் வேட்புமனு கிழிப்பு| Dinamalar

தமிழ்நாடு

திண்டுக்கல் ஒன்றிய தலைவர் தேர்தலில் தகராறு; வேட்பு மனு கிழிப்பு திண்டுக்கல்லில் வேட்புமனு கிழிப்பு

Added : ஜன 12, 2020
Share
திண்டுக்கல், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தலைவர் தேர்தலில் மோதல் வெடித்ததால் வேட்புமனு கிழிக்கப்பட்டது.திண்டுக்கல் ஊரட்சி ஒன்றியக்கவுன்சிலருக்கான 19 வார்டுகளில் தி.மு.க.,-8, மார்க்சிஸ்ட்-2, ம.தி.மு.க.,-1 அ.தி.மு.க.,-6, பா.ம.க.,-1, சுயேச்சை-1 தேர்வாகியுள்ளனர். நேற்று ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றியத்தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல் ஆர்.டி.ஓ., உஷா தலைமையில் நடந்தது.அப்போது 2



திண்டுக்கல், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தலைவர் தேர்தலில் மோதல் வெடித்ததால் வேட்புமனு கிழிக்கப்பட்டது.திண்டுக்கல் ஊரட்சி ஒன்றியக்கவுன்சிலருக்கான 19 வார்டுகளில் தி.மு.க.,-8, மார்க்சிஸ்ட்-2, ம.தி.மு.க.,-1 அ.தி.மு.க.,-6, பா.ம.க.,-1, சுயேச்சை-1 தேர்வாகியுள்ளனர். நேற்று ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றியத்தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல் ஆர்.டி.ஓ., உஷா தலைமையில் நடந்தது.அப்போது 2 கவுன்சிலர்களை தி.மு.க.,வினர் கடத்தி விட்டதாக புகார் தெரிவித்து அ.தி.மு.க.,வினர் தர்ணா செய்தனர். வேட்புமனுவை கிழித்து நாற்காலியை சேதப்படுத்தினர். திண்டுக்கல் கிழக்கு மாவட்டச்செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் செல்வராகவன் ஆகியோர் தி.மு.க., வெற்றியை அறிவிக்க வலியுறுத்தி போலீசாருடன் வாக்குவாதம் செய் தனர்.செந்தில்குமார் கூறுகையில், 'அமைச்சர் சீனிவாசன், ஒன்றியச்செயலாளர் ஜெயசீலன் மூலம் தேர்தலை நடத்த விடாமல் வேட்பு மனுவை கிழித்து பிரச்னை செய்கின்றனர். உடனடியாக தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்' என்றார். பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவுடன் தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா ஒன்றியத் தலைவராக தேர்வாகியுள்ளார் என ஆர்.டி.ஓ., உஷா அறிவித்தார்.ஜெயசீலன் (அ.தி.மு.க.,) கூறுகையில்,'தேர்தல் முறைப்படி நடைபெறவில்லை, ஒரு சுயேச்சை, 1 அ.தி.மு.க., கவுன்சிலரை கடத்தி விட்டனர். எங்களுக்கு வேட்புமனு தராமல், தேர்தல் நடத்தாமல் தி.மு.க., வெற்றி பெற்று விட்டதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிப்போம்' என்றார். திண்டுக்கல் ஒன்றிய துணைத் தலைவராக சோபியாராணி (தி.மு.க.,) தேர்வானார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X