புதுச்சேரியில் மிக மோசமான ஆட்சி காங்., எம்.எல்.ஏ., மீண்டும் குற்றச்சாட்டு

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:'புதுச்சேரியில் மிக மிக மோசமான ஆட்சி நடக்கிறது; இனி, நிறைய போராட்டங்களை நடத்துவேன்' என, காங்., எம்.எல்.ஏ., தனவேலு கூறினார்.
சட்டசபையில் அவர் நேற்று அளித்த பேட்டி:பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அத்தியாவசியமான மருந்துகள் இல்லை. போராட்டம் நடத்திய பிறகே, அங்குள்ள ஆம்புலன்ஸ்களுக்கு டீசல் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை பார்ப்பது கடவுளை பார்ப்பது போல உள்ளது. மாதத்துக்கு 3, 4 முறைதான் புதுச்சேரிக்கு வருகிறார். பாகூர் மருத்துவமனையை பார்வையிட வருமாறு அமைச்சரை அழைத்தேன். ஆனால், அவர் வரவில்லை.அனைத்து மருத்துவமனைகளிலும் அதிகப்படியான மருந்து உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், கட்டு கட்டும் துணிகூட இல்லை. வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இல்லை என, கடந்த நவம்பர் மாதத்தில் நோட்டீஸ் போர்டிலேயே அறிவிப்பு ஒட்டினர்.பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 டிரைவர்கள் உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். உண்மையில் 2 பேர் தான் உள்ளனர். மற்றவர்கள் டெபுடேஷனில் வேறு ஊரில் பணியாற்றுகின்றனர். முதல்வர், அமைச்சருடன் நேருக்கு நேராக விவாதிக்க நான் தயார்; அவர்கள் தயாரா?மிக மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இனி, நிறைய போராட்டங்கள் நடத்துவேன். எனது செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமைக்கு புகார் அனுப்பி உள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். காங்., தலைவர் ராகுலை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். கட்சி தலைமையிடம், ஆட்சியில் உள்ளவர்கள் மீது ஊழல் பட்டியலை தருவேன்.புதுச்சேரியில் ஒரு பெருச்சாளி உள்ளார். அவர் இருக்கும்வரை காங்., கட்சி வீழ்ச்சி அடையும். வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் காங்., வீழ்ச்சியை சந்திக்கும்.அமைச்சர்கள் மீது 25க்கும் மேற்பட்ட புகார்களை பலர் என்னிடம் தந்துள்ளனர். அவர்களை தோலுரித்து காட்டுவேன். தனியார் துணிக்கடை விவகாரத்தில் பணம் கைமாறி உள்ளது. ஆட்சியை நடத்துபவர்கள் சிலர், நில மோசடி செய்கின்றனர். ஒரு அமைச்சரின் துறையில் பல நிறுவனங்கள் வரிசையாக மூடப்பட்டன. கூட்டுறவு, அரசு நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகளை 2 அமைச்சர்கள் பிரித்துக் கொண்டனர்.புதுச்சேரியில் கேசினோ வந்தால் கலாசாரம் சீரழியும். விபசாரம், போதை பொருள், சூதாட்டம் வந்து விடும். கேசினோ அணுகுண்டு போன்றது. அதை எதிர்த்து போராடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X