பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல் ரூ.14.56 கோடியில்| Dinamalar

தமிழ்நாடு

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல் ரூ.14.56 கோடியில்

Added : ஜன 12, 2020



திண்டுக்கல்பொங்கலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 10 லட்சத்து 6ஆயிரத்து 724 பேருக்கு ரூ.14.56 கோடி செலவில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.திண்டுக்கல்லில் ஆர்.எம்., காலனியில் இலவச வேஷ்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் சீனிவாசன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., வேலு முன்னிலை வகித்தார். அமைச்சர் பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கினார்.அவர் கூறுகையில்,' ரூ. ஆயிரம் ரொக்கத்துடன் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் ரூ.14.56 கோடி செலவில் மாவட்டத்தில் 10 லட்சத்து 6ஆயிரத்து 724 பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களின் துயரை துடைக்கும் வகையில் ஆண்டு முழுவதும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது, என்றார். கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X