அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய தலைவருக்கு சிக்கல்: சிவகங்கை கலெக்டர் நோட்டீஸ்

Added : ஜன 12, 2020
Share
Advertisement
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றிய 6 வார்டு கவுன்சிலராக அ.ம.மு.க.., சரவண மெய்யப்பன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற 6 பேரில் நான்கு பேர் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள். காங்.,சார்பில் 5வது வார்டில் வெற்றி பெற்ற வீரகுமாரியும், 6வது வார்டில் தோல்வி அடைந்த சந்தியாகுவும், 6வது வார்டில் வெற்றி பெற்ற சரவண மெய்யப்பன் கான்ட்ராக்டராக உள்ளதாகவும், அதனை மறைத்து போட்டியிட்டு

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றிய 6 வார்டு கவுன்சிலராக அ.ம.மு.க.., சரவண மெய்யப்பன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற 6 பேரில் நான்கு பேர் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள். காங்.,சார்பில் 5வது வார்டில் வெற்றி பெற்ற வீரகுமாரியும், 6வது வார்டில் தோல்வி அடைந்த சந்தியாகுவும், 6வது வார்டில் வெற்றி பெற்ற சரவண மெய்யப்பன் கான்ட்ராக்டராக உள்ளதாகவும், அதனை மறைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவர் பெற்ற வெற்றி செல்லாது என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஜெயகாந்தனிடம் புகார் செய்தனர்.

வெற்றியை செல்லாது என அறிவிக்க சந்தியாகு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் அறிவுரையின் படி மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர்.இதனை தொடர்ந்து நேற்று முன்திினம் இரவு சரவண மெய்யப்பனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசில், சந்தியாகு கோர்ட்டில் தொடர்ந்த வழக்கையடுத்து நீதிமன்றத்தை அணுகி இரண்டு மாதத்தில் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்குள், நீதிமன்றத்தில் பரிகாரம் தேடி கொள்ளாவிடில் பெற்ற வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று கண்ணங்குடி ஒன்றிய தலைவராக சரவண மெய்யப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X