பொது செய்தி

இந்தியா

தேவநீதிதாசை ஆணையராக்க முயற்சிக்கவில்லை: கவர்னர் கிரண்பேடி

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:எனது ஆலோசகர் தேவநீதிதாசை தேர்தல் ஆணையராக்க நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என, முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டை கவர்னர் கிரண்பேடி மறுத்துள்ளார்.
புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க உத்தரவிட கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை, அதற்கான கோப்பை கவர்னர் தடுத்து நிறுத்திவிட்டார். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றும், புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமனத்தில் கவர்னர் தன்னிச்சையாக விதியை போட்டு, அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தனது ஆலோசகரும், கவர்னர் மாளிகை சிறப்பு அதிகாரியுமான தேவநீதிதாசை தேர்தல் ஆணையராக்க கவர்னர் முயற்சி செய்கிறார் என்றும், முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்து, கவர்னர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்அதில், ' முதல்வர் நாராயணாமி, தேர்தல் ஆணையர் நியமனம் மற்றும் அரிசி வழங்குவது தொடர்பாக மீண்டும், மீண்டும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி, மக்களை தவறாக வழிநடத்த பார்க்காதீர், கவர்னர் மாளிகையில் நான் இருக்கும் வரையில் தேவநீதிதாஸ் நீடிப்பார். அவரது அனுபவம், ஒழுக்கம், மக்களுக்கான சேவை கவர்னர் மாளிகைக்கு தேவைப்படுகிறது. அவரது தனிப்பட்ட ஆலோசனைகள் பயனுள்ளதாக உள்ளது. தாங்கள் நினைப்பது போல் அவர் எந்த பதவிக்கும் வர விரும்பவில்லை. எனவே, தாங்கள் அடிக்கடி பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதால் மக்களுக்கு தங்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிடும். முதல்வர் அலுவலக கன்னியத்தை காப்பாற்றுங்கள். தேர்தல் ஆணையர் நியமனம் மற்றும் இலவச அரிசி தொடர்பாக பிரச்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி எந்தகருத்தும் நான் தெரிவிக்க விரும்பவி்ல்லை'.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X