பொது செய்தி

இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:பெத்திசெமினார் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நாளை மறுநாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பாஸ்கல்ராஜ் கூறியதாவது:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் புதுச்சேரியை சேர்ந்த மாணவ மாணவிகளை அதிகளவில் வெற்றி பெற செய்யும் நோக்கத்தில், பெத்திசெமினார் ஐ.ஏ.எஸ்., அகாடமி, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.இங்கு, 6ம் வகுப்பு மாணவர்கள் முதல், கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் வரையிலும், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலதரப்பினருக்கும் ஏற்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐந்து வகையான பயிற்சி வகுப்புகள் பெத்திசெமினார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் நடத்தப்படுகிறது.ஒரு ஆண்டு காலத்திற்கான 'பிரிலிமினரி மற்றும் மெய்ன்ஸ்' சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. அடுத்ததாக, 3 ஆண்டு கால ஒருங்கிணைந்த வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இளங்கலை பட்டப் படிப்புடன், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கும் ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.மூன்றாவதாக, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் வகையில் 'கிராஷ் கோர்ஸ்' வகுப்பு நடத்தப்படுகிறது.
மேலும், ஒருங்கிணைந்த தொடர் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. ஐந்தாவதாக, பள்ளி மாணவர்களுக்கென ஜூனியர் ஐ.ஏ.எஸ்., வகுப்பு நடத்தப்படுகிறது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், வரும் 14ம் தேதியன்று மதியம் 2:00 மணிக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெத்திசெமினார் பள்ளி வளாகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், அகாடமியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளரை '81100 91200' என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X