தூத்துக்குடியில் அ.தி.மு.க., வெற்றி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் அ.தி.மு.க., வெற்றி

Added : ஜன 12, 2020
Share
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.,வின் சத்யா தேர்வு செய்யப்பட்டார்.மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 இடங்களில் அ.தி.மு.க., 12, தி.மு.க.,5ல் வெற்றி பெற்றிருந்தது. நேற்று நடந்த தேர்தலில் அ.தி.மு.க., சத்யா 12 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க., பிரம்மசக்தி 5 ஓட்டுகள் பெற்றார்.மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் கருங்குளம் -கோமதி, ஸ்ரீவைகுண்டம்- வசந்தா,

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.,வின் சத்யா தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 இடங்களில் அ.தி.மு.க., 12, தி.மு.க.,5ல் வெற்றி பெற்றிருந்தது. நேற்று நடந்த தேர்தலில் அ.தி.மு.க., சத்யா 12 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க., பிரம்மசக்தி 5 ஓட்டுகள் பெற்றார்.

மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் கருங்குளம் -கோமதி, ஸ்ரீவைகுண்டம்- வசந்தா, திருச்செந்துார்- செல்வி, சாத்தான்குளம்- ஜெயபதி, விளாத்திகுளம்- முனியசக்தி, புதுார்- சுசீலா ஆகிய 6 இடங்களில் அ.தி.மு.க.,வினர் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.துாத்துக்குடி- வசுமதி, ஆழ்வார்திருநகரி- ஜனகர், உடன்குடி- பாலசிங், ஓட்டப்பிடாரம் - ரமேஷ் ஆகிய 4 ஒன்றியங்களில் தி.மு.க.,வினர் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.கயத்தாறு ஒன்றிய தலைவராக அ.ம.மு.க.,மாணிக்கராஜா தேர்வானார். கோவில்பட்டியில் தி.மு.க.,வினர் வெற்றிபெறும் சூழல் இருந்தது. ஆனால் தேர்தல் நடததும் அதிகாரி ஜெயசீலன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X