வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் ஏற்பட்ட தகராறில் அலுவலக பொருட்கள் உடைக்கப்பட்டதையடுத்து அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகளில் அ.தி.மு.க., 6, தி.மு.க., 4, இந்திய கம்யூ., 2, தமிழக மக்கள் முன்னேற்றகழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., சமபலத்தில் இருந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் ரேகா அ.தி.மு.க.,விற்கு ஆதரவளித்தார். தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றும் நிலை இருந்தது.அ.தி.மு.க.,வில் சிந்துமுருகன், தி.மு.க.,வில் கண்ணன் போட்டியிட்டனர்.
முடிவுகளை அறிவிப்பதற்குள் 7 ஓட்டுக்களை பெற்று தி.மு.க., வெற்றி பெற்றதாக அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த கட்சியினரிடம் தகவல் பரவியது. அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க.,வினர் அலுவலகத்திற்குள் புகுந்து சேர்கள், கம்ப்யூட்டர்களை உடைத்தனர். கட்டுப்படுத்த முயன்ற ஸ்ரீவி., டி.எஸ்.பி.,ராஜேந்திரன் சட்டையை இழுத்து அவர் அணிந்திருந்த தங்கசெயினை பறித்தனர். தேர்தல் அலுவலர் வர்கீஸ், பி.டி.ஓ.,க்கள் மற்றும் அதிகாரிகள் தங்களை பாதுகாக்க அறையில் பதுங்கினர்.
கூடுதல் போலீசார் வரவழைக்கபட்டு கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். விருதுநகர் எஸ்.பி.,பெருமாள், டி.ஆர்.ஓ.,உதயகுமார் விசாரணை நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE