ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நடந்த ஒன்றிய அலுவலத்தில் முன்னாள் அமைச்சர் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தி.மு.க., அ.தி.மு.க. வினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை தலைவர், துணை தலைவருக்கான தேர்தல் தொடங்குவதற்கு முன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்களுடன் ஓட்டுப்பதிவு மையத்திற்கு சென்றார். தி.மு.க.,வினர் அவரை வெளியேற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒன்றிய அலுவலகத்திற்குள் தி.மு.க. அ.தி.மு.க.,வினரிடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டு அலுவலகத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின் மணிகண்டன், அவரது ஆதரவாளர்களுடன் வெளியேறிய பின் ஒரு மணி நேரம் தாமதமாக தேர்தல் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE