சட்டசபையில் மெஜாரிட்டியை முதல்வர் நிரூபிக்கவேண்டும்: பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் | Dinamalar

சட்டசபையில் மெஜாரிட்டியை முதல்வர் நிரூபிக்கவேண்டும்: பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன்

Added : ஜன 12, 2020

புதுச்சேரி:'சட்டசபையை உடனடியாக கூட்டி மெஜாரிட்டியை முதல்வர் நிரூபிக்க வேண்டும்' என, பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நிர்வாக சீர்கேட்டின் காரணமாக மக்களின் நம்பிக்கையை காங்., அரசு இழந்து விட்டது. அரசின் செயல்பாடுகளை கண்டித்து எதிர்கட்சியினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., தனவேலு, காங்., அரசு செயல் இழந்து விட்டதாக மக்களை திரட்டி போராட்டம் நடத்தி உள்ளார்.
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது, மக்களின் குரலாக ஒலிக்கிறது.காங்., அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது. எனவே, சட்டசபையை உடனடியாக கூட்டி மெஜாரிட்டியை முதல்வர் நிரூபிக்க வேண்டும். தார்மீக பொறுப்பேற்று தாமாகவே முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X