பொது செய்தி

இந்தியா

அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:அண்டை நாடுகளில் போலியோவின் தாக்கம் இருப்பதால், அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தீவிர போலியோ ஒழிப்பு திட்டத்தின் கீழ், புதுச்சேரி மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் 19ம் தேதியன்று நடத்தப்பட உள்ளது.இதில், 5 வயதுக்குட்பட்ட 88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 452 மையங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, சுகாதாரத் துறை முடுக்கி விட்டுள்ளது.இதுதொடர்பான மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா தலைமை தாங்கினார். இயக்குனர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.துணை இயக்குனர் (நோய்த் தடுப்பு) முருகன், போலியோ சொட்டு மருந்து அளிப்பது தொடர்பான செயல்திட்டம் குறித்து விளக்கி கூறினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் போலியோ நோயின் தாக்கம் மீண்டும் தலைதுாக்கி உள்ளதால், 5 வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் விடுபட்டு விடாமல், அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என, ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.மேலும், அரசின் மற்ற துறைகளுடனும், ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளுடனும் இணைந்து, சொட்டு மருந்து முகாமை திட்டமிட்டப்படி நடத்தி முடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், தொடர்புடைய மற்ற துறை அதிகாரிகள், ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X