பொது செய்தி

தமிழ்நாடு

இளம் விஞ்ஞானிகளை அடையாளம் காண வேண்டும்

Added : ஜன 12, 2020
Advertisement

'நாசா' விஞ்ஞானி யோசனைகொடைக்கானல், 'தமிழகத்தில் அறிவியல் கழகம் அமைத்து இளம் விஞ்ஞானிகளை அடையாளம் காண வேண்டும்' என, அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானி நாச்சிமுத்து கோபால்சாமி கூறினார்.கோவையை சேர்ந்த கோபால்சாமி அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வானியியற்பியல் விஞ்ஞானியாக உள்ளார். அவர் கூறியதாவது:இந்தியா போன்ற வளரும் நாடுகளில் டில்லியில் மட்டுமே அறிவியல் கழகம் உள்ளது. தமிழர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் தனித்திறன் படைத்தவர்களாக உள்ளனர். இவர்களை அடையாளம் காண அரசியல் சாயமில்லாத அறிவியல் கழகம் தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும். பல்கேரியா நாட்டில் இது போன்ற அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன்னதாக துவங்கப்பட்டு அந்நாட்டில் ஏராளமான விஞ்ஞானிகளை அடையாளம் கண்டுள்ளனர். இந்திய அரசு, அமெரிக்கா போன்று அறிவியலுக்கும், ஆராய்ச்சிக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கொடைக்கானல் வானியியற்பியல் விஞ்ஞானி எபினேசர் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X