பிரபல ரவுடி ஜனாவிடம் போலீசார் விசாரணை

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:போலீசாரை தாக்கிய வழக்கில் ரவுடி ஜனாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜனா (எ) ஜனார்த்தனன்,43; தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்தவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அதனையொட்டி, திருபுவனை போலீசார், ஜனாவை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த டிச.8ம் தேதி, ஆண்டியார் பாளையம் கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த ஜனாவை போலீசார் சுற்றி வளைத்தனர். உடன் ஜனா மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பினர். இதில் போலீசார் பார்த்தசாரதி, நடராஜன் ஆகியோர் காயமடைந்தனர்.இதுதொடர்பாக திருபுவனை போலீசார், ரவுடி ஜனா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்;
இந்நிலையில் ரவுடி ஜனா புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்தார்.அதனைெயாட்டி ரவுடி ஜனாவை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி புதுச்சேரி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை பரிசீலித்த நீதிபதி, ரவுடி ஜனாவை மூன்று நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.இதையடுத்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்த ஜனாவை, நேற்றுமுன்தினம் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X